வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: சென்னை மாவட்டத்தில் 39 லட்சம் வாக்காளர்கள்

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: சென்னை மாவட்டத்தில் 39 லட்சம் வாக்காளர்கள்
Updated on
1 min read

கடந்த தேர்தலைவிட 12 ஆயிரம் அதிகரிப்பு

சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி சென்னையில் மொத்தம் 39 லட்சத்து 87 ஆயிரத்து 359 வாக்காளர்கள் உள்ளனர்.

சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி, ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

சென்னையில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது வெளி யிடப்பட்ட இறுதி வாக்காளர் பட் டியல் விவரங்களின்படி மொத்தம் 39 லட்சத்து 75 ஆயிரத்து 28 வாக் காளர்கள் இருந்தனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக் காளர் பட்டியலின்படி, 19 லட்சத்து 72 ஆயிரத்து 641 ஆண் வாக்காளர் கள், 20 லட்சத்து 13 ஆயிரத்து 768 பெண் வாக்காளர்கள், 950 இதர வாக்காளர்கள் என மொத்தம் 39 லட்சத்து 87 ஆயிரத்து 359 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலை விட, தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 12 ஆயிரத்து 331 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர் தலுக்கு பிறகு நடத்தப்பட்ட வாக் காளர் பட்டியல் தொடர் திருத்தத் தில், 14 ஆயிரத்து 422 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 46 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது.

அதிக வாக்காளர்கள்

வாக்காளர் எண்ணிக்கையை பொருத்தவரை, துறைமுகம் தொகுதியில் குறைந்தபட்சமாக 1 லட்சத்து 88 ஆயிரத்து 571 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து, ஓராயிரத்து 977 வாக் காளர்களும் உள்ளனர். தற்போது வாக்குச் சாவடிகள் சீரமைக்கப் பட்டு, 3 ஆயிரத்து 768 வாக்குச் சாவடிகளாக மாற்றப்பட்டுள்ளன. அதற்கு ஏற்றவாறு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பெரம்பூர் தொகுதியில் அதிக பட்சமாக 270 வாக்குச் சாவடி களும், துறைமுகம் தொகுதி யில் குறைந்தபட்சமாக 177 வாக் குச் சாவடிகளும் அமைக்கப் பட்டுள்ளன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல்கள், அந்தந்த வாக்குச் சாவடி மையங் களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அதை பொதுமக்கள் பார்த்து, தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என் பதை உறுதி செய்துகொள்ள லாம்.

பெயர்களைச் சேர்க்க விரும்பு வோர் செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை, மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக் கலாம்.

செப். 11, 25-ல் சிறப்பு முகாம்

அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் செப்டம்பர் 11, 25 ஆகிய இரு ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். அதிலும் விண்ணப் பிக்கலாம். மேலும் www.elections.tn.gov.in இணையதளம் மூலமாகவும் பெயர்களை சேர்க் கவும், திருத்தங்கள் செய்யவும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in