திருவண்ணாமலை அருகே பேருந்து மீது லாரி மோதி 4 பேர் பலி; 18 பேர் படுகாயம்

திருவண்ணாமலை அருகே பேருந்து மீது லாரி மோதி 4 பேர் பலி; 18 பேர் படுகாயம்
Updated on
1 min read

திருவண்ணாமலை அருகே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலாப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலக் கோடு வட்டம் புலிக்கரை, பொம்மிப்பட்டி, பள்ளிமுத்தாடு மற்றும் மோகனம்பட்டி கிராமங் களைச் சேர்ந்த 57 பேர் திருநள்ளாறு சனி பகவான் கோயிலுக்கு சுற்றுலாப் பேருந்தில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூர் நெடுஞ்சாலை யில், சு.வாளவெட்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நேற்று அதிகாலை சென் றபோது, சுற்றுலாப் பேருந்தின் பின்பக்கச் சக்கரம் பஞ்சரான து. இதையடுத்து, பேருந்து நிறுத்தப்பட்டதும் அதில் பயணம் செய்த பெரும்பாலானோர் கீழே இறங்கினர்.

பஞ்சாரன சக்கரத்தை கழற்றி மாற்று சக்கரத்தைப் பொருத்தும் பணியில் சுற்றுலாப் பேருந்து ஓட்டுநர் செந்தில்குமார்(41), உதவியாளர் மற்றும் பயணி கள் ஈடுபட்டனர். அப்போது, பெரும்புதூரில் இருந்து 15 டன் எடை உள்ள கண்ணாடிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் மாவட்டம் நோக்கி சென்ற லாரி, பஞ்சராகி நிறுத் தப்பட்டிருந்த பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில், சக்கரம் மாற்றும் பணியில் ஈடுபட்ட புளியக்கரை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன்(40), முருகன் (27), முனியன் (50), நாகராஜன் (37) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

இதுபற்றி தகலவறிந்த காவல் கண்காணிப்பாளர் பொன்னி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், இடிபாடுகளில் சிக்கி படுகாயம டைந்த பேருந்து ஓட்டுநர் செந் தில்குமார் உட்பட 18 பேரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் பெரியசாமி, சின்னராஜ் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து வெறையூர் காவல் ஆய்வாளர் சுப்ர மணியன் வழக்கு பதிவு செய்து கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டு நர் அருண்குமாரை(25) கைது செய்து விசாரணை நடத்தி வரு கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in