

திருக்குறள் சிந்தனைகளை அனை வரும் தெரிந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் திருக்குறளை பாடமாக வைக்க வேண்டும் என்று மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறையின் சார்பாக திருக்குறளில் தொடர்பியல் பரிமாணங்கள் குறித்த கருத்தரங்கம் மற்றும் தமிழக அரசு பயன்படுத்தி வரும் திருவள்ளுவர் படம் வரையப் பட்டதன் 50-வது ஆண்டு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந் தினராக மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் பங்கேற்று பேசியதாவது:
திருவள்ளுவர் மிகப்பெரிய கவிஞராக திருக்குறளின் வழியே அறியப்பட்டுள்ளார். தமிழர் களின் பெருமையும் அடையாள மும், திருக்குறள் எனலாம். திருக் குறளை இந்திய தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். இவரை இந்திய தேசத் தந்தை என்றும் கூறலாம். திருக்குறள் சிந்தனைகளை அனைத்து மாண வர்கள் மனதிலும் பதிய வைக்க, நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் திருக்குறளை பாட மாக வைக்க வேண்டும் என்றார்.
மத்திய சுங்க மற்றும் சேவை வரித்துறை ஆணையர் சி.ராஜேந் திரன் ‘‘தமிழன் வாழும்வரை திருக் குறள் வாழும். திருக்குறள் வாழும் வரை தமிழன் வாழ்வான். நமது தமிழின் பெருமையை நாம் இன்னும் உணராமல் இருக்கி றோம். ஜி.யூ.போப், தருண் விஜய் போன்ற தமிழை தாய்மொழி யாக கொள்ளாதவர்கள் கூறும் போதுதான் நம் மொழியின் பெரு மையை நாம் உணர்கிறோம்’’ என்றார்.
நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவன், இதழியல் துறை தலைவர் ரவீந்திரன், திருக்குறள் கவனர் ஆர்.எல்லப்பன், திருவள்ளு வர் படத்தை வரைந்த வேணு கோபால் சர்மாவின் மகன் ஸ்ரீகாந்த் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.