Published : 04 Aug 2016 07:49 AM
Last Updated : 04 Aug 2016 07:49 AM

வட்டாட்சியர் அலுவலகம் எதிரிலேயே போலி சான்றிதழ்கள் தயாரிப்பு: மயிலாப்பூரில் பெண் உட்பட 2 பேர் கைது

மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவ லகம் எதிரிலேயே பெட்டிக் கடை யில், போலி சான்றிதழ்கள் அச் சடித்து விற்பனை செய்து வந்த பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மோசடி பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அபிராமபுரம் கிரீன்வேஸ் சாலை யில் மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. அதன் எதிரே சிறிய பெட்டிக் கடை உள்ளது. இதை ராஜாமுத்தையா புரத்தைச் சேர்ந்த மஞ்சுளா (41) என்பவர் நடத்தி வருகிறார்.

இந்த கடையில் அரசு சார்பில் வழங்கப்படும் ஜாதிச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து மயிலாப்பூர் வட்ட ஆய்வாளர் சந்திரசேகரன் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன், மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

அதன்படி, அபிராமபுரம் போலீ ஸார் வழக்கு பதிந்து விசார ணையில் இறங்கினர். போலீஸா ரின் முதல்கட்ட விசாரணையில் மோசடிக்கு மூளையாக செயல்பட் டது தேனாம்பேட்டை கணேசபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த குமார் (43) என்பது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து மஞ்சுளா, குமார் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

முன்னதாக அவர்களிடம் இருந்து 10 போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குமார் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வட்டாட்சியர் அலுவலகங்களில் இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார். இதன் அடிப்படையில் எந்தெந்த அலுவலகங்களில் எந்தெந்த அரசு அதிகாரி உள்ளார் என்ற விவரம் அவருக்கு நன்கு தெரிந்துள்ளது.

அவர்களின் பெயரில் ரப்பர் ஸ்டாம்ப், முத்திரை உள்ளிட்டவைகளை தயார் செய்து போலி கையெழுத்திட்டு அதை விற்பனை செய்துள்ளார். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார். அவருக்கு உடந்தையாக மஞ்சுளா இருந் துள்ளார் என்று அபிராமபுரம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x