

ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை (ஆயுஸ்) செயலாளர் அஜித் எம்.ஷரண் தெரிவித்துள்ளார்.
குளோபல் ஹோமியோபதி ஃபவுண்டேஷன் மற்றும் டாக்டர் கோப்பிகர்ஸ் ஃபவுண்டேஷன் ஆஃப் ஹோமியோபதி ஆகி யவை இணைந்து தேசிய அளவி லான ஹோமியோபதி மாநாட்டை சென்னையில் நேற்று நடத்தின. நாடு முழுவதும் இருந்து சுமார் 500 டாக்டர்கள் மாநாட்டில் பங்கேற் றனர். டாக்டர்கள், ஆராய்ச்சி யாளர்கள் தங்களுடைய ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
இதில் சிறப்பு விருந்தின ராக கலந்துகொண்ட மத்திய சுகாதாரத்துறை (ஆயுஸ்) செயலாளர் அஜித் எம்.ஷரன் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய தாவது:
ஹோமியோபதி மருத்துவம் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 200 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. ஹோமியோபதி மருத்துவத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஹோமியோ பதி மருத்துவத்தில் சிகிச்சைப் பெறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நல்ல கல்வி மற்றும் மருத்துவம் நாட்டின் முன்னேற்றத்தை முடிவு செய்யும். நாட்டில் 439 மருத்து வக் (அலோபதி) கல்லூரிகளில் ஒவ்வோர் ஆண்டும் 59 ஆயிரத்து 288 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்கின்றனர். 192 ஹோமியோ பதி கல்லூரிகளில் 13 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். . காலரா, வைரஸ் காய்ச்சல் போன்றவை ஹோமியோபதி மருத்துவத்தில் குணப்படுத்தப்ப டுகின்றன. ஹோமியோபதி மருத் துவம் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் அதிகப்படியான ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாநாட்டில் இந்திய ஹோமியோபதி மருத்துவ துறை யின் ஆணையர் மோகன் பியாரே, குளோபல் ஹோமியோபதி ஃபவுண்டேஷன் தலைவர் டாக்டர் ஈஸ்வர்தாஸ், துணைத் தலைவர் டாக்டர் ஜெயேஷ் பி.சங்வி, டாக்டர் கோப்பிகர்ஸ் ஃபவுண்டேஷன் ஆஃப் ஹோமியோபதி நிர்வாக அறங்காவலர் டாக்டர் பி.வி.வென்ங்கடராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.