

நோக்கியா, பாக்ஸ்கான் ஆலைகள் யாருடைய ஆட்சியின்போது மூடப் பட்டன என்பது தொடர்பாக சட்டப் பேரவையில் அமைச்சர்களுடன் திமுக உறுப்பினர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவையில் நேற்று ஜவுளி, தொழிலாளர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:
தா.மோ.அன்பரசன் (திமுக):
கடந்த கால திமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு அந்நிய முதலீடுகள் குவிந்தன. அதன் மூலம் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்தது. தமிழகத்தில் தொழில் புரட்சியே ஏற்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தொழிலாளர்கள் நலனிலும் திமுக மிகுந்த அக்கறை கொண்டிருந்தது.
தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்:
திமுக ஆட்சியில் சுமார் ரூ.23 ஆயிரம் கோடிதான் அந்நிய முதலீடு வந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ரூ.85 லட்சத்து 53 ஆயிரம் கோடி அந்நிய முதலீடு கொண்டு வரப்பட்டது.
மின்துறை அமைச்சர் பி.தங்க மணி:
திமுக உறுப்பினர் தா.மோ.அன்பரசன் பட்டியலிட்ட பல நிறுவனங்கள் அதிமுக ஆட்சியில்தான் நிறுவப்பட்டன. திமுக ஆட்சியில் ரூ.13 ஆயிரத்து 500 கோடிக்கு மட்டுமே அந்நிய முதலீடுகள் வந்தன. சிறுசிறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் சேர்த்து ரூ.23 ஆயிரம் கோடிதான் வந்துள்ளன. இதனை நிரூபிக்க தயாராக இருக்கிறேன்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல்:
கடந்த திமுக ஆட்சியில் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி 17 நிறுவனங் கள் மூடப்பட்டன.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன்:
டி.சி.எஸ்., சி.டி.எஸ்., இன்ஃபோசிஸ் போன்ற முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் அதிமுக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டன.
தா.மோ.அன்பரசன்:
சிறுசேரியில் அனைத்து முன்னணி ஐ.டி. நிறுவனங்களும் திமுக ஆட்சியில் அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டன.
மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்:
2001 முதல் 2006 வரை அதிமுக ஆட்சியில் உலகின் 10 முன்னணி ஐ.டி. நிறுவனங்களை தமிழகத்துக்கு கொண்டுவர முதல் வர் ஜெயலலிதா முயற்சி மேற் கொண்டார். இந்த 10 நிறுவனங் களுக்கு சிறுசேரியில் நிலம் வழங்கியவர் ஜெயலலிதா.
தா.மோ.அன்பரசன்:
சென்னை யில் உள்ள போர்டு நிறுவனம் குஜராத்தில் கார் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்துள் ளது. தமிழகத்திலிருந்து அவர்கள் குஜராத் சென்று ஏன்?
அமைச்சர் பி.தங்கமணி:
அமெரிக் காவுக்கு அடுத்து போர்டு நிறுவனத்துக்கு சென்னையில்தான் பெரிய ஆலை உள்ளது. வட மாநிலங்களில் போர்டு கார் விற்பனை 30 சதவீதம் இருப்பதால் உதிரிப் பாகங்களைக் கொண்டு கார்களை வடிவமைக்கும் ஆலை ரூ.200 கோடியில் குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை யில் இருந்து கார்களைக் கொண் டுச் செல்லும் போக்குவரத்து செலவை தவிர்க்க இந்த ஆலை நிறுவப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் போர்டு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தா.மோ.அன்பரசன்:
அதிமுக அரசின் செயலற்ற தன்மையால் நோக்கியா, பாக்ஸ்கான் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. பாக்ஸ்கான் ஆலை நவி மும்பைக்கு சென்று விட்டது.
அமைச்சர் பி.தங்கமணி:
நோக் கியா செல்போன் தயாரிக்கும் நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் நிறு வனமே பாக்ஸ்கான். நோக்கியா மூடப்பட்டதால் பாக்ஸ்கானும் மூடப்பட்டது. இதற்கு திமுக அரசே காரணம். இந்நிறுவனத்துக்கு ஏற்பட்ட வருமான வரி உள்ளிட்ட பிரச்சினைகளை 2008-09-ல் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக தீர்க்க முன்வரவில்லை. இதனால் இந்த ஆலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
தா.மோ.அன்பரசன்:
நல்லது நடந்தால் அதிமுக ஆட்சி என்கிறீர்கள். குறைகள் நடந்தால் திமுக ஆட்சி என்கிறீர்கள்.
அமைச்சர் பி.தங்கமணி:
2008-09-ல் பிரச்சினை ஏற்படும்போதே மத்திய அரசில் செல்வாக்கோடு இருந்த திமுகவால் தீர்வு கண்டி ருக்க முடியும். செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டியதை செய்யத் தவறியதால்தான் இந்த நிலை. பாக்ஸ்கான் ஆலைக்காக நடந்த போராட்டத்தில் ஆலை சேதமாக்கப்பட்டது. இதனைத் தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு விவாதம் நடை பெற்றது.