சசிகலா, தினகரன் போன்றோர்களால் அதிமுகவை ஒரு போதும் வீழ்த்தி விட முடியாது: தீபா

சசிகலா, தினகரன் போன்றோர்களால் அதிமுகவை ஒரு போதும் வீழ்த்தி விட முடியாது: தீபா
Updated on
2 min read

அஇஅதிமுக ஜெ.தீபா அணி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா டிடிவி.தினகரனுக்கு கடும் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தீபா கூறியிருப்பதாவது:

முன்றேழுத்தில் என் மூச்சிருக்கும் அதில் முடிந்தப்பின்னாலும் என் பேச்சிருக்கும் என்று வாழ்ந்து காட்டியதோடு அறிஞர் அண்ணாவழியில் அண்ணாதிமுக என்ற மாபெரும் இயக்கம் கண்டு என்றென்றும் நிலைத்து நிற்க்கும் வகையில் இயக்கத்தை வழி நடத்தி வெற்றியே மட்டுமே கண்டவர் எம்ஜிஆர்.அவா் வழியில் தொடர்ந்து மாபெரும் இயக்கத்தை இராணுவக் கட்டுப்பாட்டுடன்வழிநடத்தி கட்டிகாத்திட்டவர் நமது ஜெயலலிதா. தமிழக சட்டசபையில் எனக்குப் பின்னாலும் பல தலைமுறைகள் தாண்டி பல நூற்றாண்டு தொடரும் இயக்கமே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று கம்பீரத்துடன் பெருமித முழக்கமிட்டார்.அந்த மாபெரும் தலைவர்கள் கட்டிக்காத்திட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று துரோக கும்பலின் பிடியில் சிக்கி சீர்கெட்டு் வரும் நிலை மிக மிக வேதனைக்குரியது.தூரோக கும்பலின் தலைவி சிறையிலிருந்தும் திருந்தாத வன்மம் கொண்ட சசிகலாவின் வழிகாட்டுதலில் தூரோக வம்சத்தின் பினாமி வாரிசான தற்சமயம் திகார் சிறையிலிருந்து வெளிவந்து கொட்டம் அடிக்க துடிக்கும் தினகரன் அண்ணாதிமுகவை நாங்களே இயக்குவோம் என்பது

அடிமை கூடாரத்தின் மக்குச்சாமிகளாய் செயல்படும் எம்ஏஎல்களில் சிலரை தன் வசமாக்கியதின் மூலம் கட்சியும்,ஆட்சியும் எங்கள் வசமே என்று வெட்டி வீராப்பு பேசுவது பெரும் நகைச்சுவைக்குறியதும்,கேளிக்குறியதுமாகும் தீடீர் உப்புமா சாம்பார் மாதிரி தீடீர் சின்னம்மா மற்றும் திகார் தினகரன் மாதிரி ஆட்கள் அண்ணாதிமுகவிற்கு சொந்தம் கொண்டாடுவது எள்ளளவும் ஏற்புடையது அல்ல.யார் இந்த தினகரன்??? கடைக்கோடித்தொண்டனுக்கும் பரிவுடன் வாழ்வளித்திட்ட ஜெயலலிதாவினால் அடையாளம் காட்டபட்டு நம்பிக்கைகுரியவராய் மாநிலங்களவை உறுப்பினர்,கட்சியின் பொருளாளர் என்று தேர்வுச்செய்யபட்டவரே இந்த தினகரன்.தாய் உள்ளத்தோடு வாழ்வாங்கு வாழ்வளித்திட்டப்போதிலும் ஓர் தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் என்ற கொள்கையின் பிடியில் கழகத்தை வழிநடத்திய ஜெயலலிதா, தினகரனை தூரோகி என்று இனம் கண்டு பகிரங்கமாக கண்டித்து அடிப்படை உறுப்பினராகக் கூட இருக்க தகுதியற்ற நபராக நீக்கிவைத்தார்

அன்று முதல் வெளித்தெரியா வாழ்வு கண்ட நபரே இந்த தினகரன். தொடர்ந்து முகத்திரை கிழிப்பின் வக்கற்ற தன்மைக்கான பழி வாங்கலாகவே உடனிருந்தே குழிப்பறிக்கும் சசிகலா மற்றும் தினகரன் உள்ளிட்ட தூரோக கும்பலால் தான் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நேர்ந்த மரணத்தின் மர்மம் என்பது ஒட்டு மொத்த தமிழக மக்களால் முன் வைக்கப்படும் பகிரங்க குற்றச்சாட்டகும்.இந்த குற்றசாட்டுக்குகளுக்கு எல்லாம் தீர்வு வராத நிலையில் சதிகார கும்பல் கட்சியையும்,ஆட்சியையும் கைப்பற்ற நினைப்பது பொதுமக்களுக்கும், தொண்டர்களும் பொறுத்துக்கொள்ள முடியாத கோபத்தையும்,ஆத்திரத்தையும் மூட்டிள்ளது.இந்நிலையில் நாளந்தரப் பேச்சாளர்களை கைகூலிகளாக வைத்துக்கொண்டு கூவாத்துரில் கொட்டம் அடித்த சில கோமாளிகளை குதிரை பேரம் பேசி ஆட்சி தனது கையில் என்று பல ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக திகார் தினகரன் டெல்லியை மிரட்டுகிறாரா???தொண்டர்களை ஏமாற்றுகிறாரா???என்பது அவருக்கே வெளிச்சம் அதிமுக என்பது எஃகு கோட்டை வத்தலகுண்டு ஆறுமுகம்,பூலாவாரி சுகுமாறன் சிந்திய இரத்தத்தால் உருவாக்கப்பட்ட இயக்கத்தை அதிமுகவுக்கு சம்பந்தமே இல்லாத சகுனி சசிகலா,திகார் தினகரன் போன்றோர்களால் அதிமுகவை ஓருபோதும் வீழ்த்திட முடியாது.

ஜெயலலிதாவின் உண்மை வாரிசான என்னால் தான் இக்கழகம் கட்டிகாக்கப்படும் எனது அத்தை எனக்கு ஊட்டி வளர்த்திட்ட தைரியமும்,தன்னம்பிக்கையும் கொண்டுஇக்கழகத்தை மீட்டு கட்டிகாப்பதே எனது இலச்சியம்.உண்மையான அதிமுக தொண்டர்களின் இலச்சியமும் அதுவே.இலட்சியம் நிறைவேறும் அந்நாளில் தூரோக கும்பலின் கொட்டம் அடக்கப்பட்டிருக்கும வீழ்த்தப்பட்டிருக்கும் என்பதனை எச்சரிக்கையுடன் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in