

சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் 10 கிலோவாட் சூரிய மின்சாரம் உற்பத்தி மையம், திருவொற்றியூர் - எண்ணூர் இடையே 4-வது ரயில்பாதை, எழும் பூர் ரயில் நிலையத்தில் 2 புதிய மின் தூக்கிகள், பல்லாவரம் ரயில் நிலை யத்தில் டிக்கெட் அலுவலகம், தாம் பரம் ரயில் நிலையத்தில் நவீன உண வகம் உட்பட 9 திட்டங்களை தொடங்கிவைத்தார். மேலும், காணொலிகாட்சி மூலம் திருச்சி, மதுரை ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள உணவு வளா கத்தையும் தொடங்கிவைத்தார். முன்னதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோரி வரவேற்புரை ஆற்றினார்.
பின்னர், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது: தமிழகத்தில் அதிகளவில் உள்ள வளங்களை பயன்படுத்தும் வகை யில் ரயில்வே திட்டப்பணிகளை மேம்படுத்தி வருகிறோம். பட்ஜெட் டில் அறிவித்த ஏராளமான திட் டங்களை நிறைவேற்றியுள்ளோம். சில திட்டங்களில் இலக்கையும் தாண்டி பணியாற்றி வருகிறோம். ரயில்வேத் துறையை மேம்படுத்த ஆண்டுதோறும் ரூ.35 ஆயிரம் கோடி முதல் ரூ.40 ஆயிரம் கோடி வரை தேவைப்படுகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 16,500 கி.மீ தூரம் இரட்டை பாதை அமைக்கப்பட்டுள்ளன. இது வரும் 2019-ல் 20 ஆயிரம் கி.மீ தூரமாக அதிகரிக்கப்படும்.
பறக்கும் ரயில் திட்டத்தில் நிலு வையில் உள்ள ஆதம்பாக்கம் பரங்கிமலை (500 மீ) இணைக் கும் பணிகள் 18 மாதங்களில் நிறைவேற்றப்படும். திருவான்மியூர் மகாபலிபுரம் இடையே பறக்கும் ரயில் திட்டப்பணிகள் தொடங்கப் படும். ராயபுரத்தில் முனையம் அமைக்கும் பணி இந்த ஆண்டில் நிறைவடையும். சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு கட லோர ரயில்பாதை அமைக்கும் திட்டம் தமிழக அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, தமிழக அரசின் ஒத்துழைப்புடன் நிறை வேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் எம்பிக்கள் ஆர்.எஸ். பாரதி, ஹரி, டி.கே. ரங்கராஜன், ஏ.நவநீதகிருஷ்ணன், ஜெ.ஜெய வர்தன் எம்எல்ஏக்கள் கே.எஸ்.ரவிசந்திரன், ஐ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.