

பொறியியல் மாணவருக்கு போலி யான பட்டம் வழங்கியதாக தொட ரப்பட்ட வழக்கு விசாரணைக்காக உதகை நீதிமன்றத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி மற்றும் உறவினர்கள் நேற்று ஆஜராகினர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் ‘மெரிட் இண்டர்நேஷனல் இன்ஸ்டி டியூட் ஆஃப் டெக்னாலஜி’ என்ற பெயரில், நடிகர் ஸ்ரீகாந்த்தின் மாமனார் சாரங்கபாணி, பொறியி யல் கல்லூரி நடத்தி வந்தார். இக் கல்லூரியில், வட மாநிலங்கள், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வந்தனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட் டம் உடுமலையைச் சேர்ந்த ப்ரித்திவிராஜ் என்ற மாணவர், தனக்கு போலியான பட்டம் வழங்கப்பட்டதாகக் கூறி கல்லூரி நிர்வாகிகளுக்கு எதிராக, கடந்த 2012-ம் ஆண்டு உதகை பி-1 காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு, உதகை நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா, மாமனார் சாரங்கபாணி, ஷாலினி ஆகியோர் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்ததுடன், அன்று அனைவரும் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மாணவர் ப்ரித்திவிராஜ் கூறும்போது, “சம்பந்தப்பட்ட கல்லூரியில் 2006-ம் ஆண்டு சேர்ந்து, 2010-ல் படிப்பை நிறைவு செய்தேன். 4 ஆண்டுகளில் 3 பட்டங்கள் கிடைக்கும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால், வேலைவாய்ப்புக்குப் பயனாக இருக்கும் என்று சேர்ந்தேன். படிப்பு முடிந்ததும், தபாலில் பட்டத்தை அனுப்பிவைத்தனர்.
விப்ரோ நிறுவனத்துக்கு நேர் காணலுக்குச் சென்றபோது, பட்டம் போலியானது என தெரிய வந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்று விசாரித்தபோது, பட்டம் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதுடன், வேலைவாய்ப்பு கிடைக்காததால் விரக்தி அடைந்தேன்” என்றார்.