Last Updated : 09 Jul, 2016 08:39 AM

 

Published : 09 Jul 2016 08:39 AM
Last Updated : 09 Jul 2016 08:39 AM

தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் 1.2 டன் புகையிலை பொருட்கள், போதை சாக்லேட் பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறையினர் தொடர்ந்து சோதனை

தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி, கடந்த 3 நாட் களில் 20 கிலோ போதை சாக்லேட், 1,230 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற மெல்லும் வகை புகையிலை பொருட்களை தயா ரிக்க, சேமித்து வைக்க, விநியோ கிக்க, விற்க தடை விதித்து முதல் வர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டார். புகையிலைப் பொருட்களால் ஏற் படும் புற்றுநோய்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக் கப்பட்டது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி, தடை விதிக்கப் பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் சோதனையில் அதிகாரிகள் தீவி ரம் காட்டாததால், பழையபடி புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடங்கியது.

சிறுவன் பாதிப்பு

இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த 14 வயது பள்ளி சிறுவன் கடந்த வாரம் அப்பகுதியில் ஒரு பள்ளி அருகே உள்ள கடையில் விற்கப் பட்ட போதை சாக்லேட்டை வாங்கி சாப்பிட்டுள்ளான். இதில் மயங்கி விழுந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட் டான். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போதை சாக்லேட் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

இதையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் பி.அமுதா உத்தரவின்படி தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகள், குடோன்களில் துறை அதிகாரிகள், ஊழியர்கள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின்போது, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், போதை சாக்லேட்கள் கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டன.

280 பேர் மீது வழக்கு பதிவு

இந்த சோதனை குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 380 உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட் டுள்ளனர். கடந்த 3 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் 20 கிலோ போதை சாக்லேட், 1,230 கிலோ (1.2 டன்) தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 275 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த தாக 280 பேர் மீது போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது நடவடிக்கைகளும் நடக் கின்றன.

போதை சாக்லேட், புகை யிலைப் பொருட்களின் தீமைகள் குறித்து மாணவர்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்துமாறு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளின் முதல்வர்களை சந்தித்து தெரிவித்துள்ளோம். பள்ளி, கல்லூரிகள் அருகே போதை சாக்லேட், புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவது தெரிய வந்தால் உடனே தகவல் தெரிவிக்குமாறும் கூறியுள்ளோம். தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபடு வார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

175 கிலோ கஞ்சா

சென்னையில் கடந்த ஒருவார சோதனையின்போது புகையிலைப் பொருட்கள் மட்டுமின்றி 175 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகையிலைப் பொருட்கள், கஞ்சா விற்றதாக ஒரு வாரத்தில் 508 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x