

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற ரூ. 6 கோடி மதிப்பிலான, 6 கிலோ ஹெராயின் போதைப் பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கையைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 7 பேர் நடுக்கடலில் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி கடற்கரை வழி யாக இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், உதவி ஆணையர் விஜய குமார் தலைமையிலான சுங்கத் துறையினர் நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் திரேஸ்புரம் வரையிலான கடற்கரைப் பகுதி யில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தூத்துக்குடி அருகே திரேஸ்புரம் பகுதியில் இருந்து கடலுக்கு புறப்பட்டுச் சென்ற ஒரு படகு மீது சுங்கத் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட் டது. அந்தப் படகை மடக்கி சுங்கத் துறையினர் சோதனை யிட்டதில், அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.6 கோடியாகும்.
இது தொடர்பாக படகில் இருந்த ரெக்ஸன், அசோக்குமார், சந்தியாகு ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இலங்கையைச் சேர்ந்தவர்கள் நடுக்கடலில் இந்த போதைப் பொருளைத் தங்களிடம் இருந்து வாங்க வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சுங்கத் துறையி னர் வியாபாரிகள்போல அவர் களுடன் படகில் கடலுக்குள் சென்றனர். நடுக்கடலில் இவர்களி டம் போதைப் பொருளை வாங்க வந்த இலங்கையைச் சேர்ந்த 4 பேரையும் சுங்கத்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர், 7 பேரிடமும் நேற்று பகல் முழுவதும் விசாரணை நடைபெற்றது. கைது செய்யப் பட்டவர்களில் ரெக்ஸன் தூத்துக் குடியில் கால்பந்து பயிற்சியாள ராக இருக்கிறார். அசோக்குமார் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல் லூரியில் எம்.பில்., படித்து வருகிறார்.
இலங்கையைச் சேர்ந்த 4 பேரின் பெயர், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் போன்ற விபரங் களைத் தெரிவிக்க சுங்கத் துறையினர் மறுத்துவிட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசா ரணை நடைபெற்று வருகிறது.