

கட்சிக்கும், தொண்டர்களுக்கும் பல மிரட்டல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்று விஜயகாந்த் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதி ரில் உள்ள அண்ணா சிலைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று மாலை அணிவித்தார். பின்னர், கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்துகொண்ட விஜய காந்த் பேசியது:
பல்வேறு சோதனைகளைக் கடந்து தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக தேமுதிக இயங்கி வருகிறது. கட்சிக்கும், தொண்டர்களுக்கும் பல மிரட்டல் கள் தொடர்ந்துகொண்டு இருக் கின்றன. எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் பயமில்லை. ஏனெ னில் தேமுதிகவினர் பயம் அறி யாதவர்கள். பயம் இருக்கும் இடத் தில் ஆரோக்கியம் இருக்காது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா வுக்கு பர்கூர் என்றாலே பயம் ஏற்பட்டுவிடுகிறது. ஏனெனில் இந்த பர்கூர்தான் அவருக்கு வெற்றியையும் தோல்வியையும் கொடுத்த ஊர். அதனால்தான் இந்த ஊர் பக்கம் வர அவர் பயப் படுகிறார்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 91 ஆயிரம் பேர் அதிமுக வில் இணைந்ததாக கூறிக்கொள் கின்றனர். இணைந்தவர்கள் பணம், பதவிக்கு ஆசைப்பட்டு அக்கட்சிக்கு சென்றவர்கள். எத்தனை இடையூறுகள் செய் தாலும் தேமுதிகவை யாரும் அழிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.