Last Updated : 29 Dec, 2013 12:00 AM

 

Published : 29 Dec 2013 12:00 AM
Last Updated : 29 Dec 2013 12:00 AM

சென்னையில் ஆதார் அட்டை முகாம்களுக்கான கெடு நீட்டிக்க வாய்ப்பு

ஆதார் அட்டை முகாம்களுக்கான காலக்கெடு வரும் 31-ம் தேதியுடன் முடியும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் சென்னையில் 54.1 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் அட்டைக்காக பதிவு செய்துள்ளதால் இந்த காலக்கெடுவை நீட்டிக்க அனுமதி கேட்கப் போவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் இணை இயக்குநர் கிருஷ்ண ராவ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் டிசம்பர் 22ம் தேதி நிலவரப்படி 70.65 சதவீத மக்கள் ஆதார் அட்டைக்காக பதிவு செய்துள்ளனர். இதில் 22 மாவட்டங்களில் 70 சதவீதம் மக்களும், 9 மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்களும், ஆதாருக்காக பதிவு செய்திருக்கிறார்கள்.

இதில் 60 சதவிகிதத்துக்கு கீழ் மக்கள் பதிவு செய்துள்ள ஒரே மாவட்டம் சென்னைதான். தாமதமாக முகாம்களை தொடங்கியதும், குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், மக்கள் முனைப்புடன் கலந்து கொள்ளாததும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இது குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் இணை இயக்குநர் கிருஷ்ண ராவ் கூறுகையில், “சென்னையில் அலுவலகம் செல்பவர்களால் ஆதார் முகாமிற்காக நேரம் ஒதுக்க முடிவதில்லை. ஆனால் கிராமங்களில் மக்கள் அருகருகே வேலை செய்வதாலும், தகவல் வேகமாக பரவுவதாலும் அதிக சதவீதம் பதிவாகியுள்ளது. எனவே சென்னையில் முகாம்களை நீட்டிக்க மத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளிடம் அனுமதி கோரவுள்ளோம். எனவே சென்னைவாசிகள் பதற வேண்டாம்.” என்றார்.

மக்கள் தொகை பதிவேடு 2010-ல் (என்.பி.ஆர்) பதிவு செய்யப்பட்ட 5 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தற்போது ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி தமிழகத்தில் 5 வயதுக்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை 6,74,18,169 பேர். இதில் 4,76,30,0 97 பேர் ஆதாருக்காக பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 3.7 கோடி பேருக்கான ஆதார் அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் 20 லட்சம் பேருக்கு நேரடியாக வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மூலம் அட்டை வழங்கியுள்ளது. இவர்களும் இப்போது நடக்கும் முகாம்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் அரசு திட்டங்களில் பயன் பெற வசதியாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x