காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க பேரவையில் தீர்மானம்: கருணாநிதி வலியுறுத்தல்

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க பேரவையில் தீர்மானம்: கருணாநிதி வலியுறுத்தல்
Updated on
1 min read

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், 'இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று 'டெசோ' இயக்கத்தின் மூலமாகப் பேர‌ழுத்தம் கொடுத்திருக்கிறோம்.

வேறு சில கட்சிகளும் குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள், பாமக, திராவிடர் கழகம் போன்றவை இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று அறிக்கைகள் விடுத்திருக்கின்றன. தமிழக அரசின் சார்பிலும் மாநாட்டைப் புறக்கணிக்க கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளும் மற்ற பிரச்னைகளில் வெவ்வேறு கருத்திலே இருந்தாலும், ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதில் அனைவரும் ஒன்றிணைந்து ஈடுபட்டிருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழகச் சட்டப்பேரவையின் வாயிலாக ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற ஆளுங்கட்சி முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in