65-வது பிறந்த நாள் கொண்டாட்டம்: பெரியார், அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை- கருணாநிதி, அன்பழகனிடம் ஆசி பெற்றார்

65-வது பிறந்த நாள் கொண்டாட்டம்: பெரியார், அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை- கருணாநிதி, அன்பழகனிடம் ஆசி பெற்றார்
Updated on
2 min read

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தனது 65-வது பிறந்த நாளையொட்டி பெரியார், அண்ணா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கருணாநிதி, அன்பழகனிடம் ஆசி பெற்றார்.

ஸ்டாலினின் பிறந்தநாளை ஆண்டுதோறும் இளைஞர் எழுச்சி நாளாக திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அவரது 65-வது பிறந்தநாள் விழா நேற்று கொண் டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு சென்ற மு.க. ஸ்டாலின், மலர்வளையம் வைத் தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். அதையடுத்து வேப்பேரி பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது ஸ்டாலி னுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

அங்கிருந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வீட்டுக்குச் சென்ற ஸ்டாலின், அவரிடம் ஆசி பெற்றார். அதைத்தொடர்ந்து கோபாலபுரம் வீட்டுக்கு சென்று, தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதி, தாயார் தயாளு அம்மாள் ஆகியோரிடம் ஆசி பெற்றார்.

அதைத் தொடர்ந்து ஆழ்வார் பேட்டையில் உள்ள தனது இல்லத் தில் குடும்பத்தினருடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார். ஸ்டாலினின் மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின், சகோதரர் மு.க.தமிழரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர். திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், எம்எல்ஏக்கள் மா.சுப் பிரமணியன், சந்திரசேகர், ஜெ.அன் பழகன், முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன், தங்கம் தென்னரசு, தாமோதரன், இயக்குநர் அமிர்தம், செல்வி செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், திருச்சி சிவா எம்.பி. உள்ளிட்டோர் ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்துக்கு ஸ்டாலின் வந்தார். அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தனது பிறந்தநாளில் சால்வை, பொன் னாடைக்கு பதிலாக புத்தகம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, ஏராளமான தொண்டர் கள் புத்தகங்களை பரிசாக வழங்கினர்.

புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி, கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ்மாநில பொதுச் செயலாளர் கதிரவன் உள் ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

ராகுல் காந்தி வாழ்த்து

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் வெங் கய்யா நாயுடு, பொன்.ராதா கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, நடிகர் ரஜினிகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சட்டப்பேரவை காங் கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமி, நடிகர் சத்யராஜ், குஜ ராத் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகுல கிருஷ்ணன், இந்திய கம் யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், குன்றக்குடி பொன் னம்பல அடிகளார் உள்ளிட்டோர் தொலைபேசியில் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

காளை, நடமாடும் நூலகம்

திருவண்ணாமலையைச் சேர்ந்த தொண்டர் ஜாஹிர்ஷா, 3 வயது காளையை மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கினார். இதுகுறித்து ஜாஹிர்ஷா கூறும் போது, ‘‘கடந்த ஆண்டு குதிரையை பிறந்த நாள் பரிசாக வழங்கினேன்’’ என்றார்.

திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச் சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் ஆறரை அடி உயர இரும்பு அலமாரியில் 65 பெரிய புத்தகங்கள் கொண்ட நடமாடும் நூலகத்தை பரிசாக அளித்தனர். சுமார் 3 மணி நேரம் கட்சியினரின் வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார் மு.க.ஸ்டாலின்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in