

பெங்களூரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் அன்புமணி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஓசூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக இளைஞ ரணி தலைவரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி, தருமபுரி மாவட் டத்தில் தொடர்ந்து 15 நிகழ்ச்சி களில் கலந்துகொண்டார். சரியாக உணவு சாப்பிடாததால், அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. பெங்களூரு நாராயண ஹிருதயாலயா மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டு, அவருக்கு உடல் பரி சோதனை செய்யப்பட்டது. ஒரு நாள் மருத்துவமனையில் இருந்துவிட்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
நாங்கள் மருத்துவமனைக்கு சென்று அவரை சந்தித்தோம். அன்புமணி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். மருத்துவர்களும் தரமான சிகிச்சை அளித்து வருகின்றனர். பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம் என்றார்.