தமிழக பட்ஜெட்: 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தமிழக பட்ஜெட்: 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
Updated on
1 min read

இந்த ஆண்டு 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் 2016-17 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

2016-17-ம் ஆண்டில் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். திறன் மேம்பாட்டு இயக்ககத்துக்காக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் அவர் உரை நிகழ்த்தும்போது , ''தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்-2023 ஆவணத்தின்படி, 2 கோடி பேருக்கு திறன் பயிற்சி அளிக்க மாநில திறன் மேம்பாட்டு இயக்கத்தை அரசு அமைத்துள்ளது. மாநிலத்தில் நடைபெறும் அனைத்து திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பைப் பெருக்கும் நோக்கில் கல்லூரிகள், மற்றும் கல்வி நிறுவனங்கள், தொழில்நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கான முயற்சிகள் ஊக்குவிக்கப்படும்.

2016-17-ம் ஆண்டில் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். திறன் மேம்பாட்டு இயக்ககத்துக்காக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகளையும் தகவல்களையும் அளிக்கும் வழிகாட்டி மையங்களாக வேலைவாய்ப்பு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள தரவு தகவல்களை (டேட்டா பேஸ்) தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தி அவர்களுக்குத் தேவையான நபர்களை தேர்வுசெய்து பணிகளில் அமர்த்திக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in