

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திரு நாவுக்கரசர் - முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இடையே நாளுக்கு நாள் மோதல் வலுத்து வருகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜிநாமா செய்து, 3 மாதங்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 14-ம் தேதி தமிழக காங்கிரஸ் தலைவராக சு.திருநாவுக்கரசர் நியமிக்கப் பட்டார்.
அவர் தலைவராக நியமிக்கப் படலாம் என செய்தி வெளியான தும், ‘‘அதிமுக, பாஜகவில் இருந்து வந்த ஒருவரை மாநிலத் தலைவராக நியமிக்கக் கூடாது’’ என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு இளங் கோவன் கடிதம் அனுப்பினார். இளங்கோவன் ஆதரவு மாவட்டத் தலைவர்கள் 30-க்கும் அதிக மானோர் திருநாவுக்கரசரை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் ராகுல் காந்தி திருநாவுக்கரசரையே தலைவராக நியமித்தார்.
தலைவராக நியமிக்கப்பட்டதும் இளங்கோவனை அவரது வீட்டுக் குச் சென்று சந்தித்தார் திருநாவுக் கரசர். அதனைத் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் இருவரும் இணைந்து கலந்து கொண்டனர். ஆனால், ஜெயலலிதாவின் மறை வுக்குப் பிறகு திருநாவுக்கரசர் அதிமுகவுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக இளங்கோவன் பகிரங்கமாக குற்றம்சாட்டி வரு கிறார். “ஜெயலலிதாவுக்கு அளிக் கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என இளங்கோவன் கேட்க, ‘‘வெள்ளை அறிக்கை வெளியிடு வதால் ஜெயலலிதா உயிரோடு வரப்போவதில்லை’’ என்றார் திரு நாவுக்கரசர். அதற்கு காட்டமாக பதிலளித்த இளங்கோவன், ‘‘ராஜீவ் காந்தி கூட தான் உயி ரோடு வரப்போவதில்லை. அதற் காக அவரை கொலை செய்தவர் களை தண்டிக்க வேண்டாம் என கூற முடியுமா?’’ என கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் பகிரங்க மாக விமர்சித்துக் கொண்டனர்.
அதன் பிறகு காங்கிரஸ் செயற் குழு கூட்டத்திலும் திருநாவுக்கரசர் - இளங்கோவன் இடையே வார்த்தை போர் வெடித்தது. சசிகலா - ஓபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்ட பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லியில் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். அப்போது ராகுல் முன்னிலையிலேயே இருவரும் மோதிக் கொண்டனர்.
கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவை யில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு நிலையை எடுக்க திருநாவுக்கரசர் திட்டமிடுவதாக செய்தி வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இளங்கோவன், ‘‘திருநாவுக்கரசர் அதிமுகவைச் சேர்ந்தவர் போலவே நடந்து கொள்கிறார். அவர் அதிமுகவில் இணைந்துவிடுவதே நல்லது’’ என விமர்சித்தார். இது குறித்து திருநாவுக்கரசரிடம் செய்தியாளர்களிடம் கேட்டபோது, ‘‘இளங்கோவன் பேசியதற்கெல் லாம் நான் பதிலளிக்க விரும்ப வில்லை’’ என்றார்.
பரபரப்பு
இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக நேற்று அண்ணா அறிவாலயம் வந்த இளங்கோவன், ‘‘திருநாவுக்கரசர் யார் என்றே தெரியாது’’ என கடுமையாக விமர்சித்தார். கட்சியின் முக்கியத் தலைவர்களான இருவரும் பகிரங்கமாக மோதிக் கொள்வது அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.