

தினகரனின் ஒப்புதல் இல்லாமல் அமைச்சர்கள் கூட்டம் நடக்க வாய்ப்பு இல்லை என்று கர்நாடக மாநில அதிமுக அம்மா கட்சியின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் தமிழக அமைச்சர்கள் திடீர் ஆலோசனை மேற்கொண்டனர். கட்சியை ஒற்றுமையுடன் வழிநடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
இது தொடர்பாக கர்நாடக மாநில அதிமுக அம்மா கட்சியின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அனைத்து அமைச்சர்களும் ஆலோசனை நடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. தினகரனின் ஒப்புதல் இல்லாமல் அமைச்சர்கள் கூட்டம் நடக்க வாய்ப்பு இல்லை. நாளை சசிகலாவை, தினகரன் சந்தித்து பேசுவார். சசிகலா மற்றும் தினகரன் ராஜினாமா செய்ததாக வந்த செய்தி தவறானது'' என்று புகழேந்தி கூறினார்.