இந்திய கணிதவியல் நிறுவனம் சார்பில் வானவியல், தகவல் பாதுகாப்பு குறித்த சொற்பொழிவு: 26-ம் தேதி சென்னையில் நடக்கிறது

இந்திய கணிதவியல் நிறுவனம் சார்பில் வானவியல், தகவல் பாதுகாப்பு குறித்த சொற்பொழிவு: 26-ம் தேதி சென்னையில் நடக்கிறது
Updated on
1 min read

இந்திய கணிதவியல் நிறுவனம் சார்பில் வானவியல், தகவல் பாதுகாப்பு பற்றிய சிறப்பு அறி வியல் சொற்பொழிவு வரும் 26-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

மத்திய அரசு நிறுவனமான இந்திய கணிதவியல் நிறுவனம், அறிவியல் குறித்து பொதுமக் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம், பயிலரங்கம், சொற்பொழிவு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், வானவியல், புலிகள் மரபணு, தகவல் பாதுகாப்பு, மூலக்கூறு செயல்பாடுகள் பற்றிய சிறப்பு அறிவியல் சொற்பொழிவு நிகழ்ச்சி 26-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கில் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறுகிறது.

இதில் புலிகள் மரபணு குறித்து பெங்களூரில் உள்ள தேசிய உயிரியல் மைய இணை பேராசிரியர் உமா ராமகிருஷ்ண னும், இணைய யுகத்தில் தகவல் பாதுகாப்பு குறித்து சென்னை கணிதவியல் நிறுவன பேராசிரியர் அம்ரிதான்சு பிரசாத்தும், வானவியல் குறித்து புனேயில் உள்ள தேசிய வானொலி வான் இயற்பியல் மையத்தின் மூத்த பேராசிரியர் யஷ்வந்த் குப்தாவும், மூலக்கூறு செயல்பாடுகள் குறித்து சென்னை கணிதவியல் நிறுவன முன்னாள் பேராசிரியர் எஸ்.கிருஷ்ணசாமியும் பேசுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் வயது, பணி பின்னணி என எவ்வித பாகுபாடும் இன்றி அறிவியல் மீது ஆர்வம் உள்ள எவர் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம். எனினும் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைனில் (http://www.imsc.res.in/triveni) முன்கூட்டியே பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

மேற்கண்ட தகவலை சென்னை கணிதவியல் நிறுவன பேராசிரியர்கள் கவுதம் மேனன், கே.என்.ராகவன், பி.வருணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in