

தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஓட்டம் நேற்று ஆவடியில் நடந்தது. 5 கி.மீ. தூரம் நடந்த இந்த ஓட்டத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று தூய்மை இந்தியா என்ற திட்டத்தை டெல்லியில் தொடங்கினார்.
இந்த திட்டத்தின் மூலம் காந்தி ஜெயந்தி அன்று ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்புத் துறையின் தரக்கட்டுப் பாட்டு அலுவலகம் சார்பில் ஆவடி சி.டி.எச்., சாலை பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஓட்டம் நேற்று நடந்தது. இதற்கு பிரிகேடியர் ராஜன் தலைமை தாங்கினார். ஆவடி கனரக வாகன தொழிற்சாலை பொதுமேலாளர் ஹரிமோகன் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆவடி கனரக வாகன தொழிற்சாலை விருந்தினர் மாளிகையில் புறப்பட்ட இந்த ஓட்டம் ஆவடி, சி.டி.எச்., உள்ளிட்ட பகுதி வழியாக கனரக வாகன தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அஜெய்யா மைதானத்தில் நிறைவடைந்தது.
5 கி.மீ., தூரம் வரை நடந்த இந்த ஓட்டத்தில் ஆவடியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் மத்திய பாது காப்புத் துறை அதிகாரிகள் முந்நூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.