சர்வதேச தொலைத் தொடர்பு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை

சர்வதேச தொலைத் தொடர்பு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை
Updated on
1 min read

சர்வதேச தொலைத் தொடர்பு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 'எஸ்டிவி 333' என்ற ரீசார்ஜ் திட்டத்துக்கு 3 நாட்களுக்கு அளவில்லா தகவல்களை பதிவிறக்கம் செய்யும் சலுகையை வழங்கியுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் அண்மையில் எஸ்டிவி 333, 339 349, 395 ஆகிய 4 டேட்டா ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இதில், எஸ்டிவி 333 ரீசார்ஜ் திட்டம் வாடிக்கையாளர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. தினமும் 3 ஜிபி அளவுக்கு தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்நிலையில், சர்வதேச தொலைத்தொடர்பு தினத்தை முன்னிட்டு மே 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு எஸ்டிவி 333 ரீசார்ஜ் திட்டத்தில் அளவில்லா தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாயப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in