ராமதாஸ் மகள் மீது நில மோசடி வழக்கு: போலீஸார் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ராமதாஸ் மகள் மீது நில மோசடி வழக்கு: போலீஸார் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

திண்டிவனத்தைச் சேர்ந்தவர் கோனேரி. இவரது மனைவி ஆனந்தாயி (58). இவர் கடந்த 2015 நவம்பர் மாதம் விழுப் புரம் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் கோனேரிகுப்பத்தில் தனது 1 ஏக் கர் 90 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஸ்ரீகாந்தி என்பவர் மோசடி செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.

இப்புகார் தொடர்பான நில உரிமை ஆவணங்களை சமர்ப் பிக்குமாறு போலீஸார் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஆனந் தாயி ஆவணங்களை சமர்ப்பிக் கவில்லை. அதனால் இப்புகார் தொடர்பாக போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் ஆனந்தாயி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவில், நில மோசடி குறித்து தான் புகார் அளித்தும் போலீ ஸார் நடவடிக்கை எடுக்க வில்லை. தமக்கு மிரட்டல் வருவதால் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், இதுகுறித்து திங்கள்கிழமைக்குள் விளக்கம் அளிக்குமாறு விழுப்பும் நில அப கரிப்பு தடுப்புப் பிரிவு போலீ ஸாருக்கு உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக விழுப்புரம் நில அபகரிப்பு டிஎஸ்பி சிவாஜி அருள் செல்வம் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஆனந்தாயி கொடுத்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ள நிலம் யாருக்கு சொந்தமானது என விசாரித்து அதன் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள காந்தி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in