Published : 01 Jan 2016 10:30 AM
Last Updated : 01 Jan 2016 10:30 AM

சுற்றுச்சூழல், நீர்நிலை பாதுகாப்பு குறித்து 2 நாள் சிறப்பு கருத்தரங்கம்: சென்னையில் நாளை தொடங்குகிறது

அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பதில் இளைஞர்கள் பெரும் பங்காற்றினர். இந்த இளை ஞர் சக்தியை ஒருங்கிணைத்து தமிழகத்தின் சுற்றுச்சூழல் பாது காப்பில் ஆக்கப்பூர்வமான பணி களை மேற்கொள்ளும் நோக்கில் ‘யாதும் ஊரே’ என்ற சிறப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது ‘தி இந்து’ குழுமம்.

நடிகர் சூர்யாவின் அகரம் அறக் கட்டளை, ‘புதிய தலைமுறை’ குழுமம் ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி, தன்னார்வ இளைஞர்களுக்கு நீர்வளத்துறை அறிஞர்கள் வழிகாட்டுவர்.

‘யாதும் ஊரே’ திட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல், நீர்நிலை பாதுகாப்பு குறித்த 2 நாள் கருத்தரங்கம், சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளி நூற்றாண்டு அரங் கில் நாளையும், நாளை மறு நாளும் (சனி, ஞாயிறு) நடக்கிறது.

கருத்தரங்க தொடக்க விழாவில் ‘புதிய தலைமுறை’ குழும தலைவர் சத்ய நாராயணன் வரவேற்புரை ஆற்றுகிறார். ‘தி இந்து’ குழும தலைவர் என்.ராம் வாழ்த்திப் பேசுகிறார். அகரம் அறக்கட்டளை நிறுவனர் நடிகர் சூர்யா, ‘யாதும் ஊரே’ திட்டம் குறித்து அறிமுகவுரை நிகழ்த்துகிறார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசுகிறார். காந்திய மக்கள் இயக் கத் தலைவர் தமிழருவி மணியன், ‘இன்று புதிதாய் பிறப்போம்’ என்ற தலைப்பிலும், இந்தியா வின் ‘தண்ணீர் மனிதர்’ என அழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர சிங், ‘இணைந்தோம், இணைத் தோம்’ என்ற தலைப்பிலும் உரையாற்றுகின்றனர்.

பிற்பகல் நடைபெறும் முதல் அமர்வில் பேராசிரியர்கள் எஸ்.ஜனகராஜன், ஆர்.ஜெ.ரஞ்சித் டேனியல், பொறியாளர் ஜி.சுந்தர் ராஜன், டாக்டர் ஜெயஸ்ரீ வெங்கடேசன் ஆகியோரும், 2-வது அமர்வில் சுற்றுச்சூழல் அறிஞர் கோவை சதாசிவம், பியூஸ் மானுஷ், பேராசிரியர் டி.நரசிம் மன், சி.சீனிவாசன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

கருத்தரங்குக்கான ஏற்பாடு களை ‘தி இந்து’ குழுமம், அகரம் அறக்கட்டளை, ‘புதிய தலைமுறை’ குழுமம், சக்தி மசாலா, ராம்ராஜ், ஓலா ஆகியவை இணைந்து செய்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x