

திண்டுக்கல் மாவட்டத்தில் விளையும் திராட்சைகள் கேரளம் மற்றும் ஆந்திர மாநி லங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. விலையும் உயர்ந்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை அடிவாரம் பகுதி களான கொடைரோடு, மெட்டூர், காமலாபுரம், ஊத்துப்பட்டி, அமலி நகர், சின்னாளபட்டி, ஜாதிக்கவு ண்டன்பட்டி, வெள்ளோடு, பெருமாள் கோயில்பட்டி உள் ளிட்ட பகுதிகளில் திராட்சை விளைவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் மழை காரணமாக திராட்சை பழம் கொடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டு பழங்கள் சேதமடைந்தன. தற்போது வறண்ட வானிலை காணப்படுவதாலும், திராட்சை கொடிகளுக்கு போது மான நீர் கிடைப்பதாலும் விளை ச்சல் நல்லமுறையில் உள்ளது. இதனால் திராட்சை பழங்கள் சேதமின்றி முழுமையாக அறு வடை செய்யப்படுகிறது. விலையும் விவசாயிகளுக்கு திருப் திகரமாக உள்ளது. தற்போது கேரளம், ஆந்திர மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் திண்டுக்கல் மாவட் டத்துக்கு வந்து திராட்சைகளை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.
திண்டுக்கல் சிறுமலையடிவாரம் பகுதியில் விளையும் திராட்சை பழத்துக்கு தனி ருசி உள்ளது. கடந்த ஆண்டு திராட்சை மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டது.
இந்த ஆண்டு தற்போது கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விவசாயி ராமசாமி கூறியதாவது: ஓராண்டில் தண்ணீர் பிரச்சினையால் திராட்சை விவசாயம் பாதிக்கும். மறு ஆண்டு அதிக மழை பெய்து கொடியிலேயே பழங்கள் அழுகி விளைச்சல் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இந்த ஆண்டு திராட்சை கொடிகளுக்கு பாய்ச்ச ஓரளவு தண்ணீர் இருப்பதும். கோடை மழை அளவாக பெய்வதும் ஏதுவாக உள்ளது. இதனால் விளைச்சல் அதிகரித்துள்ளது. விலையும் திருப்திகரமாக உள்ளது என்றார்.