Published : 03 Jan 2014 00:00 am

Updated : 06 Jun 2017 17:28 pm

 

Published : 03 Jan 2014 12:00 AM
Last Updated : 06 Jun 2017 05:28 PM

சென்னையில் தூங்கிக் கொண்டிருந்த பெண் மீது ஆசிட் வீச்சு

தூங்கிக் கொண்டிருந்த பெண் மீது ஜன்னல் வழியாக ஆசிட் ஊற்றிய இளைஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை தரமணி தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஷோபனா (வயது 23, பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் வீட்டு செலவுகளை ஷோபனாதான் கவனித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஜன்னல் ஓரமாக தூங்குவது வழக்கம். புதன் கிழமை இரவிலும் வழக்கம் போல தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலை 3.30 மணியளவில் ஜன்னல் கம்பியின் இடைவெளி வழியாக இளைஞர் ஒருவர் பாட்டிலில் கொண்டு வந்த ஆசிட்டை எடுத்துவந்து ஷோபனா மீது ஊற்றியுள்ளார்.

முகம் மற்றும் கையில் ஆசிட் பட்டதும், அலறித் துடித்து எழுந்த ஷோபனா அபயக் குரல் எழுப்பினர். இதைப் பார்த்ததும் ஆசிட் ஊற்றிய இளைஞர் தப்பி ஓடி விட்டார்.

சிறிது நேரத்தில் தனது உடல் முழுவதும் எரிவதுபோல இருப்பதாக ஷோபனா கூற, அவரது தாயார் திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு ஷோபானாவை சோதனை செய்த டாக்டர்கள், “கழிவறையை சுத்தம் செய்ய ஊற்றப்படும் ஆசிட்டைதான் ஊற்றியிருக்கிறார்கள். இது பெரிய அளவில் பாதிப்பை உண்டு பண்ணாது. எனவே பயப்பட வேண்டாம்” என்று கூறி அவருக்கு சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தனர். இது டயலூட்டடு ஆசிட் என்றாலும் ஷோபனாவின் முகம் மற்றும் கைகளில் இருந்த மேல் பகுதி தோல்கள் உரிந்து விட்டன.

இந்த சம்பவம் குறித்து தரமணி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஷோபனாவுடன் பணிபுரியும் ஒரு இளைஞர்தான் ஆசிட் வீச்சில் ஈடுபட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காற்றில் பறக்கும் அரசின் கட்டுப்பாடுகள்

சென்னையில் கடந்த ஆண்டு வினோதினி, திவ்யா ஆகிய இரண்டு பெண்கள் ஆசிட் வீச்சில் பலியானார்கள். அதைத் தொடர்ந்து ஆசிட் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால் பாரிமுனை பகுதிகளில் உள்ள கடைகளில் ஆசிட் விற்பனை எந்த தடையும் இல்லாமல் சுதந்திரமாக நடத்தப்படுகிறது. நகை பட்டறைகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் பெயர்களில் போலியாக ஆசிட் வாங்கப்பட்டு அவை திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுகின்றன.


பெண் மீது ஆசிட் வீச்சுசென்னைவன்முறை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author