நிதானமாக பேச வேண்டும்: திமுக எம்எல்ஏவுக்கு முதல்வர் அறிவுரை

நிதானமாக பேச வேண்டும்: திமுக எம்எல்ஏவுக்கு முதல்வர் அறிவுரை
Updated on
1 min read

எப்போதும் நிதானமாக பேச வேண்டும் என திமுக எம்எல்ஏவுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கினார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று நடந்த விவாதத்தில் பேசிய திருச்செந்தூர் தொகுதி திமுக உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், ‘‘வார்தா புயலின் போது லட்சக்கணக்கான மரங்கள் விழுந்தன. இதற்கு பதில் மரம் நடப்படும் என்று அரசு அறிவித்துள் ளது. அதை முன்னாள் முதல்வரின் பிறந்த தினத்தில் தொடங்கப்படும் என தேதி குறித்தது ஏன்?’’ என்றார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

அனிதா ராதாகிருஷ்ணன் கேட்ட கேள்விகளுக்கு எனது பதிலுரை யில் உறுதியாக பதில் தருகிறேன். அப்போது அவைக்கு அவர் வர வேண்டும். நாட்டு மக்களுக்கு முன் னாள் முதல்வர் ஜெயலலிதா செய்த பணிகளை போற்றும் வகையில் அவரது பிறந்த தினத்தன்று மரம் நடும் விழா தொடங்க நாள் பார்க்கப்பட்டுள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன் தற் போது சேர்ந்த இடத்துக்கு விசுவாச மாக இருப்பதற்காக இதை பேசு கிறார். முன்னர் எங்களிடம் இருந்த போது அவர் என்னவெல்லாம் பேசி னார் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, எப்போதும் நிதானமாக பேச வேண்டும். அவர் நன்றாகத்தான் பேசிக் கொண்டிருந்தார். சேகர்பாபு எழுதிக் கொடுத்ததை தற்போது பேசியுள்ளார். இனி இதுபோல் பேச வேண்டாம்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in