

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளித்த மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘கொளத்தூர் வண்ண மீன் விற்பனையாளர்களின் கோரிக்கையை ஏற்று மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் ரூ. 10 கோடியே 30 லட் சம் அரசு நிதி உதவியுடன் வண்ண மீன் வானவில் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
‘‘வண்ண மீன் வளர்ப்பு, உணவுக்கான மீன் வளர்ப்பு களுக்கு உதவி செய்ய மீன்வளத்துறை தயாராக உள்ளது. சுய வேலைவாய்ப்பை விரும்பும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என அமைச்சர் டி.ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
அதிமுக உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் (பூம்புகார்) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, ‘‘தாழ்த்தப்பட்டவர் களுக்கு முகம் கொடுத்தவர் அம்பேத்கர். முகவரி கொடுத் தவர் அக்ரஹாரத்து அம்பேத்கர் ஜெயலலிதா’’ என்றார்.