

அரசு கேபிள் டிவி நிறுவன இ-சேவை மையங்களில் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை திருத்தம் செய்யும் வசதி வருகிற 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவ னம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் அரசு இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. தலைமைச் செயலகம், தாலுகா அலுவலகங்கள், சென்னையில் மாநகராட்சி தலைமை அலுவல கம் (ரிப்பன் மாளிகை) மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றில் செயல்பட்டு வரும் இ-சேவை மையங்களில் ஏற்கெனவே ஆதார் எண் பெற்றவர்கள் தங்கள் ஆதார் அட்டையில் குறிப் பிடப்பட்டுள்ள விவரங்களைத் திருத்தம் செய்யும் வசதி பிப்ரவரி 10-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் இ-சேவை மையங்களுக்கு சென்று, ஆதார் எண்ணை தெரி வித்து தங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, செல் போன் எண், இ-மெயில் முகவரி, புகைப்படம் ஆகிய விவரங்களை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு சேவை கட்டணமாக ரூ.25 மட்டும் வசூலிக்கப்படும்.