

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மதுரை யில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ரேஷன் கடைகளில் எந்தப் பொரு ளும் கிடைப்பதில்லை. ஜனவரி முதல் துவரம் பருப்பு, உளுந்து, பாமாயில் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன. புயல், வறட்சி என அடுத்தடுத்து வந்த இயற்கைப் பேரிடர்களுக்கு மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை.
நீட் தேர்வு தமிழக மாணவர்களை பயமுறுத்திக்கொண்டு இருக்கிறது. அதிமுகவில் அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அங்கிருந்து ஆட்சி நடத்த முயற்சிக்கும் நிலை தமிழகத்துக்கு ஆபத்தானது. தமிழகத்தில் நேர்வழி யில் காலூன்ற முடியாததால் கொல் லைப்புற வழியாக அதிகாரத்தைப் பிடிக்க ஆளுநர் மூலம் பாஜக முயற்சி செய்கிறது.
குளிர்பானம் தயாரிக்க தாமிர பரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்தத் தடையை நீக்க நீதிமன்ற உத்தரவிட்டிருப்பது முரண்பாடாக இருக்கிறது. இதையெல் லாம் மக்களிடம் எடுத்துரைக்க ‘எழுக தமிழகமே’ என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம் மார்ச் - 2 முதல் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது என்றார்.