ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
Updated on
1 min read

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற் படையினர் விரட்டி அடித்தனர். வலைகளை வெட்டி கடலில் வீசிய தோடு, கல் மற்றும் சோடா பாட்டிலால் மீனவர்களை தாக்கி உள்ளனர்.

ராமேசுவரத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு களில் 3,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கட்கிழமை கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடிக்க முயன்றனர்.

அப்போது ரோந்துக் கப்பல் களில் வந்த இலங்கை கடற் படையினர், இங்கு மீன் பிடிக்கக் கூடாது என எச்சரித்தனர். மேலும் வலைகளை வெட்டி கடலில் வீசினர்.

மீனவர்கள் மீது கற்களை யும், சோடா பாட்டில்களையும் வீசி தாக்கினர். இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் நேற்று கரைக்குத் திரும்பினர்.

அவர்கள் செய்தியாளர் களிடம் கூறும்போது, “மீனவர் கள் மீதான தாக்குதல் களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இரு நாட்டு மீன வர்களும் நான்காம்கட்ட பேச்சு வார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் விரைவில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இலங்கை சிறைகளில் வாடும் 24 தமிழக மீனவர்களையும், அவரகளது 93 படகுகளையும் விரைவில் விடுவிக்க வேண்டும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in