பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி பரிசு: தமிழக அரசு அறிவிப்பு

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி பரிசு: தமிழக அரசு அறிவிப்பு
Updated on
1 min read

ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு ரூ.2 கோடி பரிசு அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா மாரியப்பன் தங்கவேலுக்கு எழுதியுள்ள வாழ்த்து மடலில், "ரியோடி ஜெனீரோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளீர்.

இந்தியா சார்பில் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. 1.89 மீட்டர் உயரத்தைத் தாண்டி வரலாற்றில் இடம் பெற்றுள்ளீர். இந்திய தேசத்துக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர்.

தடைகளைத் தாண்டி நீங்கள் அடைந்துள்ள இந்த உயரம் எண்ணற்ற குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் ஊக்கமாக இருக்கும். தமிழக மக்கள் சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களது சாதனையைப் பாராட்டி தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடி பரிசுத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in