சாதாரண கட்டண பேருந்துகள் குறைந்து வருகின்றன: சொகுசு போர்டு போட்ட பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகின்றன

சாதாரண கட்டண பேருந்துகள் குறைந்து வருகின்றன: சொகுசு போர்டு போட்ட பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகின்றன
Updated on
2 min read

மாநகர போக்குவரத்துக் கழ கத்தில் சாதாரண பஸ்களின் இயக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. சொகுசு பஸ் என போர்டு போட்டு கட்டண வசூல் செய்யப்படு கிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகத்தில் 845 வழித் தடங்களில் மொத்தம் 3,685 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினந்தோறும் 53.04 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். மாநகர பஸ்களில் 1,488 பஸ் கள் சாதாரண கட்டணத்திலும் (வெள்ளை பலகை), 780 பஸ் கள் விரைவு பஸ்களாகவும் (பச்சை பலகை), 1,125 பஸ்கள் சொகுசு பஸ்களாகவும் (நீல பலகை), 92 ஏசி பஸ்களும் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழக நிர் வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால், சாதாரண மற்றும் விரைவு பஸ்களை காட்டிலும் சொகுசு பஸ்கள்தான் அதிக ளவில் இயக்கப்படுகின்றன என்பது பயணிகளின் புகாராக இருக்கிறது. உடைந்த கதவு கள், கிழிந்த இருக்கைகள், ஒழுகும் மேற்கூரைகள் கொண்ட பஸ்களில் போர்டு களை மட்டும் மாற்றிவிட்டு சொகுசு பஸ்கள் எனக்கூறி இயக்கப்படுவது மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள் ளது.

இது தொடர்பாக ‘தி இந்து’ வின் உங்கள் குரலில் வாசகர் பாலகன் கூறியதாவது:

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் “எம்” சர்வீஸ் பஸ்கள் இயக்கப்பட்டன. சாதாரண பஸ்களை விட ரூ.2 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அந்த நிலை மாறி தாழ்தள சொகுசு பஸ்கள் என இயக் கப்பட்டன. இந்த பஸ்களில் அதிகமாக கட்டணம் வசூலிக் கப்படுகிறது. தாழ்தள சொகுசு பஸ்களில் உயர்தர அடிச்சட்டம் பொருத்தப்பட்டி ருந்ததுடன், தாழ்வாக படிக் கட்டுகள் அமைக்கப்பட்டி ருந்ததால் சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் எளிதாக ஏறி இறங்க ஏதுவாக இருந்தது. இந்த வகையான பஸ்கள் தான் அதிகமாக இயக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் புதியதாக வந்துள்ள பஸ்களில் தாழ்தள வசதி இல்லை. ஆனால், சொகுசு பஸ்கள் என போர்டுகளை வைத்து கூடுதல் கட்டணத்தில் பஸ்களை இயக்குகின்றனர். எனவே, மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத் தில் இயக்கப்படும் சாதாரண பஸ்களை அதிகளவில் இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

இது தொடர்பாக தொழிலா ளர் முன்னேற்ற சங்கம் (தொமுச) பொருளாளர் நடராஜன் கூறும்போது, ‘‘மாநகரத்தில் இயக்கப்படும் பஸ்களில் 3 ஆயிரம் பஸ்கள் காலம் கடந்துதான் இயக்கப் படுகின்றன.

மேலும், பழுதாகும் பஸ்களை உடனடியாக பராமரிக்க போதிய உதிரி பாகங்களும் இல்லை. பராம ரிப்புப் பணிகள் முழுமையாக நடக்காததால், பஸ்கள் ஆங் காங்கே பழுதாகி நிற்கின்றன. பெரும்பாலான பஸ்களின் இருக்கைகள், கண்ணாடிகள் உடைந்து காணப்படுகின்றன. எனவே, போதிய அளவில் புதிய பஸ்களை இயக்கவும், பழுதாகி உள்ள மாநகர பஸ்களை பராமரிக்கவும் தமிழக அரசு போதிய நிதி வழங்க வேண்டும்’’ என்றார்.

அதிகாரிகளின் விளக்கம்

இது தொடர்பாக போக்கு வரத்துக்கழக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘மாநகர பஸ்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு இயக்கப்படு கிறது. இருப்பினும் பஸ்களை சீரமைக்கவும், உதிரி பாகங் களை வாங்கவும் போதிய நிதி வழங்கக் கோரி தமிழக அரசிடம் வலியுறுத்தி யுள்ளோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in