Published : 23 Mar 2017 09:14 AM
Last Updated : 23 Mar 2017 09:14 AM

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி: 7 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பங்களை இன்று (வியா ழக்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதித் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 73 ஆயிரம் விண்ணப் பங்கள் விற்பனை ஆகியுள்ளன

விண்ணப்ப விற்பனை நேற் றுடன் முடிவடைந்தது. இந்த நிலை யில், பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்களை தேர்வுகட்டணத் துக்கான செலானுடன் (கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250 மட்டும்) இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் அறிவிக்கப்பட்டுள்ள மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் கல்வி, சாதி சான்றிதழ் நகல்கள் எதுவும் இணைக்க தேவையில்லை. தேர்வு கட்டணத்துக்கான செலான் மட்டும் போதும். பூர்த்தி செய்த விண்ணப் பத்தைச் சமர்ப்பிக்கச் செல்லும் போது அதை நகல் எடுத்துக் கொண்டுசெல்ல வேண்டும். அதில் கையெழுத்து மற்றும் சீல் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். அதை விண்ணப்பம் சமர்ப்பித் ததற்கான ஒப்புகைச்சீட்டாக பயன் படுத்திக் கொள்ளலாம்.

ஒவ்வொரு மையத்திலும் பெற் றுக்கொள்ளப்படும் விண்ணப்பங் கள் சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அங்கு விண்ணப்பங்கள் சரிபார்க் கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு ஆசிரி யர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் படும். இணையதளத்திலிருந்து விண்ணப்ப எண்ணை பதிவுசெய்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தனியே வெளியிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x