

மஹாயோகம் யோகப் பயிற்சி அமைப்பு சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 40 மணி நேரம் யோகா சனங்களை மேற்கொண்டு கின்னஸ் சாதனை படைக்கப் பட்டுள்ளது.
சர்வதேச யோக தினம் ஜூன் 21-ம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, மஹாமகரிஷி அறக் கட்டளை, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் தொடங்கியது.
தொடர்ந்து 40 மணி நேரம் நடைபெற்ற யோகசான நிகழ்வுகள் நேற்று இரவு 11.37 மணியளவில் நிறை வடைந்தது.
இதுகுறித்து, மஹாயோகம் அமைப்பின் பொறுப்பாளர் ரமேஷ் கூறும்போது, “மஹாயோகத்தில் பயற்சி பெற்ற 7 பெண்கள் உட்பட மொத்தம் 43 பேர் 600 ஆசனங்களை சுழற்சி முறையில் செய்து காண்பித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
முந்தைய சாதனை
இதற்கு முன்பு 30.33 மணி நேரம் தொடர்ந்து யோகாசனங் களை மேற்கொண்டதே சாதனையாக இருந்தது. இதனை முறியடித்து தொடர்ந்து 40 மணி நேரம் யோகா பயிற்சி செய்து செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளோம்.
யோகாவால் உடல் மற்றும் மன வலிமையை நிலைநாட்ட முடியும் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் இந்தச் சாதனை முயற்சியை மேற்கொண்டோம்” என்றார்.