Published : 30 Jul 2016 08:56 AM
Last Updated : 30 Jul 2016 08:56 AM

திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் இரு வேறு விபத்துகளில் பாதிரியார், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 8 பேர் பலி: அரசு பேருந்து ஓட்டுநர் உட்பட 7 பேர் படுகாயம்

திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் பாதிரியார் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். அரசுப் பேருந்து ஓட்டுநர் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

நிலக்கோட்டை அருகே மைக் கேல்பாளையத்தைச் சேர்ந்தவர் அருண் அருளப்பன்(31). இவர், கொடைக்கானல் சலேத்மாதா ஆலயத்தில் உதவி பங்குத் தந்தையாக இருந்தார். வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி சலேத்மாதா ஆலயத் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கு போஸ்டர்கள், கொடி, தோரணங்களை வாங் குவதற்காக கொடைக்கானலில் இருந்து சிவகாசிக்கு ஜீப்பில் சலேத்மாதா ஆலய பங்கு நிர்வா கிகள் சகாயராஜ்(54), ஏசுராஜ்(51), மைக்கேல்(56) ஆகியோருடன் பங்குத்தந்தை அருண் அருளப் பன் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டார்.

சிவகாசிக்குச் சென்றுவிட்டு கொடைக்கானலுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.நேற்று அதிகாலை வாடிப்பட்டி - கொடைரோடு இடையே வாகனம் சென்றபோது திடீரென பின்பக்க டயர் வெடித்தது. இதில் வாகனம் நிலைதடுமாறியதில் சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்த லாரி மீது மோதி யது. இதில் சம்பவ இடத் திலேயே 4 பேரும் உடல் நசுங்கி பலியாயினர். வாகனத்தை ஓட்டி வந்த மார்க்ரோ லக்ஸ்(28) படுகாய மடைந்தார். அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலி

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம் மேலைப்பனை யூரைச் சேர்ந்த வேலு என்பவர் நேற்று காலை ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் காலில் காயம் அடைந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட் டது. அதில் வேலு(70), அவருக்கு உதவியாக மகள் முத்துமாரி(32), மேலப்பனையூரைச் சேர்ந்த சோமவேல்(45) ஆகியோர் ராம நாதபுரம் அரசு மருத்துவமனைக்கு நேற்று அழைத்து வரப்பட்டனர்.

திருப்புல்லாணி பள்ளபச் சேரி பஸ் நிறுத்தம் அருகே ஆம்புலன்ஸ் வந்தபோது, திருப்பத்தூரில் இருந்து ஏர்வாடி தர்ஹா செல்லும் அரசுப் பேருந்து முன்னால் சென்ற ஆட்டோவை முந்த முயன்றது. அப்போது ஆம்புலன்ஸும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராமநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்த பிரேம்குமார் மகன் சர வணக்குமார்(28), வேலு, முத்துமாரி ஆகியோர் பலியாயினர். ராமநாதபுரம் அரசு மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோமவேல் இறந்தார்.

ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர் முத்து லெட்சுமி(21), அரசுப் பேருந்து நடத் துநர் லோகநாதன்(44), பயணிகள் ராமேசுவரத்தைச் சேர்ந்த முருகே சன்(40), கீழக்கரையைச் சேர்ந்த முத்தையா(54), அன்சாமி(56), முத்துவேல்(38) ஆகியோர் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.

விபத்து நடந்ததும் அரசுப் பேருந்து ஓட்டுநர் தலைமறைவா கி விட்டார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சரவணக்குமாருக்கு 6 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் விபத்தில் அவர் பலியாகியதால் பெற்றோர், உற வினர்கள் மருத்துவமனையில் அழுதது பரிதாபமாக இருந்தது.

விபத்துக்கு காரணம்

முன்னால் சென்ற ஆட்டோவை அரசுப் பேருந்து முந்த முயன்ற போது ‘ஸ்டியரிங்’ உடைந்து எதிரே வந்த ஆம்புலன்ஸ் மீது மோதியுள்ளது. அரசுப் பேருந்து களை முறையாகப் பராமரிக்காததே இதுபோன்ற விபத்து, உயிரிழப்பு களுக்கு காரணம் எனப் பயணிகள் தெரிவித்தனர். மேலும் 108 ஆம்புலன்ஸ்களையும் சில வருடங்களாக முறையாகப் பராமரிப்பதில்லை என அதன் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x