பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு சென்ற மக்கள்: பஸ், ரயில்களில் அலைமோதிய கூட்டம்

பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு சென்ற மக்கள்: பஸ், ரயில்களில் அலைமோதிய கூட்டம்
Updated on
1 min read

பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து நேற்று முதலே பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்து மற்றும் ரயிர்களில் புறப்பட்டு செல்கின்றனர்.

சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் பொங்கலை கொண்டாடுவதற்காக நேற்று இரவே பேருந்து மற்றும் ரயில்கள் மூலமாக சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

சென்னையில் வழக்கமாக விழாக் காலங்களில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படும். அதை தவிர்க்க கடந்த தீபாவளி பண்டி கைக்கு செய்ததுபோல பூந்த மல்லி, தாம்பரம் அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப் பட்டு, அங்கிருந்து தினமும் 1700-க் கும் மேற்பட்ட பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது. இது சொந்த ஊர் செல்லும் பயணி களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. போக்குவரத்து நெரிசல் இன்றி பயணித்த முதல் பொங்கல் பயணமாக இது அமைந்தது. பெரும்பாலானோர் நேற்று சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மேலும் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப் பட்டன. அதனால் அப்பகுதி யில் நேற்று இரவு மக்கள் கூட்டம் அலைமோதியது.

3 லட்சம் பேர் பயணம்

சென்னையில் இருந்து கடந்த இரு நாட்களில் பொங்கல் சிறப்பு பேருந்து களில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர், ரயில்கள் மூலம் 50 ஆயிரம் பேர் என மொத்தம் 3 லட்சம் பேர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in