சொத்துக் குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட ஜெ.வின் 27,588 கிராம் தங்கம் அரசு சொத்தாக வாய்ப்பு: பெங்களூரு நீதிமன்றத்தில் உள்ளன

சொத்துக் குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட ஜெ.வின் 27,588 கிராம் தங்கம் அரசு சொத்தாக வாய்ப்பு: பெங்களூரு நீதிமன்றத்தில் உள்ளன
Updated on
1 min read

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமு தல் செய்யப்பட்டு பெங்களூரு நீதி மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள 27,588 கிராம் தங்க நகைகள் அரசு சொத்தாக மாற வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறை அதிகாரிகள் 7.12.1996 முதல் 12.12.1996 வரை போயஸ் கார்டனில் உள்ள ஜெயல லிதா வீட்டில் சோதனை நடத்தினர். அங்கிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை சுங்கத்துறை அதிகாரி வாசுதேவன் `மெட்லர் எலெக்ட்ரானிக்' என்ற தராசு மூலம் மதிப்பிட்டார். மொத்தம் 27 ஆயிரத்து 588 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் அன்றைய மதிப்பு ரூ.1 கோடியே 8 லட்சத்து 94 ஆயிரத்து 519. தங்க நகைகளில் பதிக்கப்பட்டிருந்த வைர கற்களின் மதிப்பு ரூ.2 கோடியே 91 லட்சத்து 54 ஆயிரத்து 606. வெள்ளிப் பொருட்கள் 1,116 கிலோ கைப்பற்றப்பட்டன.

ஆக மொத்தம் ஜெயலலிதா வின் வீட்டில் இருந்து கைப் பற்றப்பட்ட தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் சில அலங்கார பொருட்கள் இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 கோடியே 47 லட்சத்து 91 ஆயிரத்து 252 என அப்போது மதிப்பிடப்பட்டது.

ஜெயலலிதா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம், வைர நகைகள் நந்தனம் அரசு கருவூலத் துக்கு கொண்டு செல்லப்பட்டன. 1,116 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஜெயலலிதாவின் ஆலோசகர் பாஸ்கரனிடம் கொடுக்கப்பட்டன. 1996-ம் ஆண்டு பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்ட 1,116 கிலோ வெள்ளிப் பொருட்களை பெங்க ளூரு நீதிமன்றத்துக்கு கொண்டு வருவதில் நீதிபதி குன்ஹா பிடி வாதம் காட்டினார். அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் அக்கறை காட்டாததால் அது நிறைவேறாமல் போனது. இந்நிலையில் 3 ஆண்டு களுக்கு முன்னர் பாஸ்கரனும் இறந்துவிட்டதால், தற்போது அந்த 1,116 கிலோ வெள்ளி யாரிடம் இருக்கிறது என தெரியவில்லை.

ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில், நகைகள் மற்றும் பொருட்கள் என்ன ஆகும் என்பது குறித்து தமிழக லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகளி டம் கேட்டபோது, “அரசு கருவூலத் தில் இருக்கும் நகைகளும் சொத் துக் குவிப்பு வழக்கில் சேர்க்கப் பட்டுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு அனைவருக்கும் தண்டனை வழங் கப்பட்டுள்ளது. இதனால் நகை கள் உட்பட அனைத்து பொருட் களும் அரசின் சொத்தாகவே மாற்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன” என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in