

அரசு ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று புதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்துள்ள அரசுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தனது வரவேற்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
முதல்வர் பழனிசாமி, உடனடியாக கவனம் செலுத்தக்கூடிய பிரச்சினைகளில் அரசு ஊழியர்கள் பிரச்சினையும் ஒன்று.
பழைய ஓய்வூதிய திட்டம்
எனவே, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சட்டப்பேரவையில் அறிவித்தபடி, புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடரவும், 8-வது ஊதிய மாற்ற பரிந்துரைகளை அமல்படுத்தும் வகையில் குழு அமைக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுத்து, அரசு ஊழியர்களின் இன்னல்களை போக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.