

கே.ஏ.செங்கோட்டையன், கோகுல இந்திரா, சைதை துரைசாமி உள்ளிட்டோருக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், துணை நிர்வாகிகள் நியமன அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாலர் வி.கே.சசிகலா வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
அதன்படி, கே.ஏ.செங்கோட்டயன், கோகுல இந்திரா, சைதை துரைசாமி, பி.வி.ரமணா உள்ளிட்ட 13 பேருக்கு கழக அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
1. கே.ஏ.செங்கோட்டையன் - கழக அமைப்புச் செயலாளர்.
2. எஸ்.கோகுல இந்திரா- கழக அமைப்பு செயலாளர்.
3. சைதை துரைசாமி- கழக அமைப்புச் செயலாளர்
4. பி.வி.ரமணா- கழக அமைப்புச் செயலாளர்
5. வரகூர் அருணாசலம்- கழக அமைப்புச் செயலாளர்
6. வி.சோமசுந்தரம்- கழக அமைப்புச் செயலாளர்
7. பி.எம்.நரசிம்மன்- கழக அமைப்புச் செயலாளர்
8. எம்.எஸ். நிறைகுளத்தான்- கழக அமைப்புச் செயலாளர்
9. எஸ்.அன்பழகன்- கழக அமைப்புச் செயலாளர்
10. கே.அண்ணாமலை- கழக அமைப்புச் செயலாளர்
11. கே.கே.உமாதேவன்- கழக அமைப்புச் செயலாளர்
12. வி.கருப்பசாமி பாண்டியன்- கழக அமைப்புச் செயலாளர்
13. புத்திசந்திரன்- கழக அமைப்புச் செயலாளர்
14. என்.ஆர்.சிவபதி- கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்.
15. என்.முருகுமாறன் எம்.எல்.ஏ. - கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்
16. அமைச்சர் டி.ஜெயக்குமார்- கழக மீனவர் பிரிவுச் செயலாளர்.
17. நீலாங்கரை முனுசாமி- கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர்
18. கே.குப்பன்- கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர்
19. கே.ஏ.ஜெயபால்- கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர்.
20. நயினார் நாகேந்திரன்- கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்
21. டாக்டர் வைகைச் செல்வன்- கழக இலக்கிய அணி இணைச் செயலாளர்
23. எஸ்.கே.செல்வம் - கழக புரட்சித்தலைவி பேரவை துணைச் செயலாளர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவர் போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ள நிலையில் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.