Published : 01 Feb 2014 07:25 PM
Last Updated : 01 Feb 2014 07:25 PM

கோவை: இலவசத்தால் சமுதாயத்திற்கு பயன் இல்லை

இலவசத்தால் சமுதாயத்திற்கு எவ்வித பயனும் ஏற்படாது என, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார். கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற ஆனந்த வைபவம் நிகழ்ச்சியில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேசியதாவது:

தேச பக்தி என்பது தெய்வ பக்திக்கு இணையானது. தெய்வத்தின் மீது எந்த அளவுக்கு நாம் பக்தி வைக்கிறோமோ, அதே அளவுபக்தி நமது தேசத்தின் மீதும் வைக்க வேண்டும். ஒவ்வொருவரும் ஞானம், அன்பு ஆகியவற்றின்படி செயல்பட வேண்டும்.

கொள்கை, சிந்தனை, செயல் ஆகிய மூன்றும் நேர்மையாக ஒரே நேர்கோட்டில் இருந்தால், வாழ்வு சிறக்கும். குற்றச் சம்பவங்களும் குறையும். ஆன்மிகத்தை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் தலைசிறந்து விளங்கலாம். சமூகத்தில் வன்முறையும் இருக்காது.

நாட்டின் நலனுக்கு 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் ஓட்டு அளிக்க வேண்டும். நல்ல சமுதாயம், மது விலக்கி வைத்திருக்க வேண்டும். அதிகமான உர பயன்பாட்டால் நமது மண், வளத்தை இழந்துள்ளது. இயற்கை வேளாண்மை மட்டுமே என்றும் நல்லது.

மக்களுக்கு இலவச பொருள்கள் வழங்குவதன் மூலம், எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை. இலவசத்தைக் குறைத்து அனைவருக்கும் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு ஏட்டுக் கல்வி மட்டும் போதாது, தொழில்கல்வி மிக அவசியம் என்றார். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x