Published : 03 May 2017 10:44 AM
Last Updated : 03 May 2017 10:44 AM

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் தீவிரம்: நெடுவாசலில் மனிதச் சங்கிலி; குளத்தில் இறங்கி கோஷம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட் டுள்ளோர் நேற்று மனிதச் சங்கிலி அமைத்ததுடன், குளத்தில் இறங்கி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.

நெடுவாசலில் ஹைட்ரோ கார் பன் திட்டத்தை செயல்படுத்துவதை ரத்து செய்யக் கோரி ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழுவின் சார்பில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று மார்ச் 9-ம் தேதி போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில், மார்ச் 27-ம் தேதி இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது. இது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத னால், விரக்தியடைந்த நெடுவாசல் பகுதி இளைஞர்கள் 2-ம் கட்டமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 21-வது நாளாக நேற்று கருப்பு ஸ்டிக்கர்களை வாயில் ஒட்டிக்கொண்டு சிறுவர் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அங்கு உள்ள குளத் தில் இறங்கி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்ட னர். பின்னர், அங்கு உள்ள கடை வீதியில் மனிதச் சங்கிலி போராட் டம் நடைபெற்றது.

குளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த வெள் ளையம்மாள் என்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்தோர் வெள் ளைம்மாளை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கூறும்போது, “முதல்கட்டமாக போராட்டம் நடத்தப்பட்டபோது, இத்திட்டத்தை செயல்படுத்த மாட் டோம் என மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தி ருந்தனர். இத்திட்டத்துக்கு அனுமதி அளிக்கமாட்டோம் என தமிழக முதல்வர் பழனிசாமியும் உறுதி அளித்தார்.

அதனால்தான், முதல்கட்ட போராட்டத்தை கைவிட்டோம். ஆனால், அடுத்த சில நாட்களி லேயே இத்திட்டத்தைச் செயல்படுத் துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந் தத்தில் மத்திய அரசு கையெழுத் திட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி யது. 6 மாதங்களுக்குள் இத்திட் டத்தை நெடுவாசலில் தொடங்கு வோம் என ஜெம் லேபரேட்டரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், 2-ம் கட்டமாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறோம். இதுவரை அரசுத் தரப்பில் யாரும் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இத்திட்டத்தை ரத்து செய்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x