Published : 19 Mar 2017 11:07 AM
Last Updated : 19 Mar 2017 11:07 AM

பணப் பட்டுவாடாவை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஆர்.கே.நகரில் பணப் பட்டு வாடாவை தடுக்க தேர்தல் ஆணை யம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கொருக் குப்பேட்டையில் நேற்று நடைபெற் றது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக வேட்பாளர் கங்கை அமரன், பாஜக மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத், எம்.ஜி.ஆரின் பேரன் பிரவீன் எம்.ஜி.ஆர். உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் நிருபர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பலமுனைப் போட்டி உருவாகியுள் ளது. பாஜக சார்பில் மக்கள் உணர்வுகளை புரிந்துகொண்ட, தமிழகம் அறிந்த கங்கை அமரனை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார். இதுவரை எத்தனையோ கட்சிகளுக்கு வாய்ப்பளித்த ஆர்.கே.நகர் தொகுதி மக்கள், இந்த முறை பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

பாஜக வென்றால் ஆர்.கே.நகர் தொகுதியை தத்தெடுத்து முன்மாதிரி தொகுதியாக மாற்று வோம். கடந்த ஆண்டு மழை, வெள்ளத்தால் இப்பகுதி பாதிக் கப்பட்டபோது பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக வந்து பார்வை யிட்டார். உடனடியாக ரூ.1,000 கோடி நிதி வழங்கினார்.

ஆர்.கே.நகரில் தேர்தல் முறை யாக, சுதந்திரமாக, நேர்மையாக நடக்க வேண்டும். இத்தொகுதியில் விநியோகம் செய்வதற்காக பெரம் பூரில் பெருமளவில் பணம் பதுக்கப் பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. தொகுதியில் இப்போதே பணப் பட்டுவாடா தொடங்கியுள்ளதாக தகவல்கள் வருவது அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் நேர்மை யாக நடக்க வேண்டும் என்றால் பணப் பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். இல்லையெனில் பணப் பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x