சோனியா பிறந்த நாள் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு: தமிழக காங்.

சோனியா பிறந்த நாள் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு: தமிழக காங்.

Published on

தென்னாப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மறைவையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மறைவையொட்டி, இந்தியாவில் 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

எனவே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுரையின்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 68வது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுகின்றன.

சோனியா காந்தி நலமுடன் நீடூழி வாழ, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in