ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து: தலைவர்கள் கருத்து

ஆர்.கே. நகர்  இடைத்தேர்தல் ரத்து: தலைவர்கள் கருத்து
Updated on
2 min read

சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி (ஏப்ரல் 12) நடைபெறவிருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. மேலும், பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் பெருமளவில் கிடைக்கப் பெற்றது. இதன் அடிப்படையில் ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களில் இடைத்தேர்தல் பணப் பட்டுவாடா தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றதையும் தேர்தல் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது.

ஆ.ர்.கே. நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:

"வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், முதல்வர் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையமே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்"

அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் இ.மதுசூதனன்:

"ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது"

தமிழக பாஜக தலைவர் தமிழசை சவுந்தரராஜன்:

"ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தேர்தல் நடத்த நேர்மையான சூழ்நிலை இருந்தால் மட்டுமே ஆ.கே. நகரில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று கூறியிருப்பது மீண்டும் தேர்தல் நடத்தால் பணம் பட்டுவாடா நடைபெறும் என்று கூறியவர்களுக்கு பதிலடியாகும்"

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:

தமிழகத்தில் பாஜக அரசு காலூன்றவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது"

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்:

"ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்வதால் எந்த பலனும் இல்லை. பணப் பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்"

திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன்: ''ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது தேசிய அளவில் தமிழகத்துக்கு ஏற்பட்ட அவமானமாகும். இதற்கு ஆளும் கட்சியே காரணம்".

அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டி.டி.வி.தினகரன்:

"ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது ஜனநாயகப் படுகொலை"

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்:

"ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்ட பணம் முறையான பணமா?" என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் வேட்பாளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. மேலும், பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் பெருமளவில் கிடைக்கப்பெற்றன. இதன் அடிப்படையில் ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களில் இடைத்தேர்தல் பணப் பட்டுவாடா தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றதையும் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in