

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெரும் புகழ்பெற அவரது அமைதியும் அடக்கமுமே காரணம் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மேலும், சச்சினின் சுயசரிதை நூலை தான் ஆர்வத்துடன் படித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், அண்மையில் எழுதி வெளியிட்ட, அவரது சுயசரிதை நூலான "'பிளேயிங் இட் மை வே" கிடைக்கப்பெற்றேன்.
கிரிக்கெட்டில் சாதனைகள் பல புரிந்த போதும் அமைதியின் உருவமாய், ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி அடக்கத்துடன் அவர் பதிலளிக்கும் பாங்கும் அந்தப் பண்பாடும்கூட, அவர் பெரும் புகழ்பெறக் காரணங்களாக அமைந்தன என்றால், அது மிகையல்ல.
எந்நாளிலும் எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சச்சினின் - சுயசரிதை நூலை ஆர்வத்துடன் படித்து வருகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.