அதிமுக-வில் 23 பேருக்கு புதிய பதவிகள், பொறுப்புகள்: பொதுச் செயலாளரான பின் சசிகலாவின் முதல் நடவடிக்கை

அதிமுக-வில் 23 பேருக்கு புதிய பதவிகள், பொறுப்புகள்: பொதுச் செயலாளரான பின் சசிகலாவின் முதல் நடவடிக்கை
Updated on
2 min read

அதிமுகவில் தனக்கான ஆதரவை பெருக்கிக்கொள்ளும் நடவடிக்கையாக, முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் 23 பேருக்கு கட்சிப் பொறுப்புகளை பொதுச்செயலாளர் சசிகலா வழங்கி யுள்ளார். அதே நேரம் சிலரை முக்கிய பொறுப்புகளில் இருந்தும் விடுவித் துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அதிமுகவின் பொதுச் செயலாளராக அவரது தோழி சசிகலாவை கட்சியின் பொதுக்குழு தேர்வு செய்தது. அவர் டிசம்பர் 31-ம் தேதி முறைப்படி பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். தொடர்ந்து, அதிமுக வின் அமைப்பு ரீதியிலான 50 மாவட்டங்களின் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உட்பட பல்வேறு நிர்வாகிகளை சந்தித்தார்.

அவர்கள் சார்ந்த மாவட்டங்களின் பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்ததுடன், கட்சி வளர்ச்சிக்கான நடவடிக்கைகள், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, ஜெயலலிதா பிறந்ததினம் கொண்டாடுவது தொடர் பாகவும் ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து, மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டத்தையும் நடத்தினார். அவர் தனக்கான ஆதரவை நிலைநிறுத்தும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறார். அதன் ஒரு பகுதியாக பல்வேறு தரப்பினரையும் போயஸ் தோட்ட இல்லத்தில் சந்திக்கிறார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அதிமுக நிர்வாகிகள் பலர் ஆதரவு தெரிவித்தபோதும், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி விமர்சித்த போதும் அதை கண்டுகொள்ளவோ, அவர்கள் மீது கட்சிரீதியாக நடவடிக்கை எடுக்கவோ இல்லை.

இந்நிலையில், தனக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பல ருக்கு கட்சியில் பதவிகளை வழங்கியுள் ளார். இது கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவின் முதல் நடவடிக்கையாகும். சசிகலா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுகவின் தலைமை நிர்வாகிகள், துணை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள னர். இதன்படி, அமைப்புச் செயலாளர் களாக, முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.கோகுல இந்திரா, பி.வி.ரமணா, வி.சோமசுந்தரம், புத்திச்சந்திரன், முன்னாள் எம்பிக்கள் எஸ்.அன்பழகன், எம்.எஸ்.நிறைகுளத்தான், சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் வரகூர் அ.அருணாசலம், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை சா.துரைசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, பி.எம்.நரசிம்மன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் கே.அண்ணா மலை, கே.கே.உமாதேவன், வி.கருப்ப சாமி பாண்டியன் ஆகியோரும் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக இருந்த அலெக்சாண்டர் எம்எல்ஏ அப்பொறுப்பில் இருந்து விடுவிக் கப்பட்டு, முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதியும், இணைச் செயலாளராக என்.முருகுமாறன் எம்எல்ஏவும் நியமிக் கப்பட்டுள்ளனர்.

மீனவர் பிரிவு செயலாளராக இருந்த நீலாங்கரை எம்.சி.முனுசாமிக்கு பதில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நியமிக்கப் பட்டுள்ளார். இணைச் செயலாளர் பொறுப்பு நீலாங்கரை எம்.சி.முனுசாமி, முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன், முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொள்கைபரப்பு துணைச் செயலாள ராக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந் திரன், இலக்கிய அணி இணைச் செயலாளர் களாக முன்னாள் அமைச்சர் வைகைச்செல் வன், கோ.சமரசம், ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.செல்வம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட வி.அலெக்சாண்டர், அவர் ஏற்கெனவே வகித்துவரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் தொடர்வார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாரிய தலைவர் பதவிகள்

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பொறுப்புகளில் இல்லாத கட்சியின் மற்ற நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களுக்கு கட்சிப் பதவிகள் வழங்கப்படும். வாரியங்களின் தலைவர்கள் பதவியும் வழங்கப்படும். தற்போது தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு வாரியங்களின் தலைவர் பதவிகள் காலியாக உள்ளன. இப்பதவிகளிலும் கட்சி நிர்வாகிகள் சிலரை நியமிக்க அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in