

சுற்றுச்சூழலுக்கு மிகுந்த கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது துணிப் பை இயக்கம்.
சுற்றுச்சூழலைப் பேணிக்காப் பதில் ஆர்வம் கொண்டவர்களால் 2011-ல் இந்த இயக்கம் தொடங் கப்பட்டது. இந்த அமைப்பின் ஒருங் கிணைப்பாளரான ரமேஷ் கருப் பையா, துணிப் பை இயக்கத்தின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பிளாஸ்டிக் பைகள் நமது சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி விட்டு, தூக்கி எறியப்படும் பிளாஸ் டிக் பைகளால் பல்வேறு ஆபத்து கள் ஏற்படுகின்றன.
பிளாஸ்டிக் பைகள் மண் வளத்தை அழித்து, நிலத்தை மல டாக்குகின்றன. நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றன. மக்கும் தன்மை யற்ற இந்தப் பைகளை, உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடும் கால்நடைகள், செரிமானக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினை களால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின் றன. இதுபோன்ற பல்வேறு தகவல் களால் மனமுடைந்த நான், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக அக்கறை கொண்ட சிலரின் ஆலோசனையுடன் துணிப் பை இயக்கத்தைத் தொடங்கினேன்.
நமது அன்றாடப் பயன்பாட்டுக் காக ஒரு துணிப் பையைப் பயன்படுத்துவதன் மூலம், பல நூறு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைத் தவிர்க்க முடியும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை நாம் துணிப் பைகளைத்தான் பயன்படுத்தி வந்தோம். எனவே, பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து, துணிப் பைகளைப் பயன்படுத்தும் விழிப்புணர்வை மக்களிடம் ஏற் படுத்த முடிவுசெய்தோம்.
துணிப் பைகளைப் பயன்படுத்தி வந்த நமது பாரம்பரியத்தையும், பிளாஸ்டிக் பைகளினால் ஏற்படும் தீமைகளையும் மக்களிடம் விளக்கி, பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத் துவதை தவிர்க்கச் செய்துவரு கிறோம்.
2012-ல் சென்னையில் நடை பெற்ற புத்தகத் திருவிழாவில், எங்கள் அமைப்பின் முயற்சியால் பிளாஸ்டிக் பைகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டு, புத்தகம் வாங்கு வோருக்கு துணிப் பைகள் வழங் கப்பட்டன. இதற்கு கிடைத்த வர வேற்பு, அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற புத்தகத் திருவிழாக்களிலும் துணிப் பை வழங்கத் தூண்டியது.
தற்போது, கிராமம் மற்றும் நகரங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள், திருவிழாக்களில் ஒன்றுகூடும் மக்களிடம், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் ஆபத்து கள் குறித்து பிரச்சாரம் செய் கிறோம். மேலும், இலவசமாக துணிப் பைகளை வழங்கி, அவற் றைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அதுதவிர, முக்கிய நிகழ்ச்சி கள், விழாக்களின்போது, ஏற்பாட் டாளர்களை அணுகி, பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து, துணிப் பையை வழங்குமாறு வலியுறுத்து கிறோம்.
பொது நிகழ்ச்சிகளில் துணிப் பைகளை இலவசமாக வழங்க முன்வரும் நிறுவனம், அந்தப் பைகளில் குறிப்பிட்ட அளவு விளம்பரம் செய்துகொள்ளவும் அனுமதிக்கிறோம். எங்களது இந்த முயற்சிக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் துணிப் பை இயக்கம் தீவிரமாக களப்பணி யாற்றி வருகிறது. உயிர் எழுத்து, தமிழ்க் களம், ஆவாரை, புதிய பயணம் உள்ளிட்ட பல்வேறு நற்பணி இயக்கங்கள், துணிப் பை இயக்கத்தை பரவலாக்குவதில் ஈடுபாடு காட்டிவருகின்றன.
40 மைக்ரான் தடிமனுக்குக் கீழுள்ள பிளாஸ்டி பை உற் பத்தியை, முற்றிலும் தடை செய்ய அரசு முன்வர வேண்டும். அதுவரை, துணிப் பை இயக்கம் தனது பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றார்.
இதுவரை, லட்சக்கணக்கான துணிப் பைகளை மக்களுக்கு வழங்கி, ஏராளமான பிளாஸ்டிக் பைகளின் புழக்கத்தைக் குறைத்து, பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டுமென்பதே சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. (துணிப் பை இயக் கத்தினரை தொடர்புகொள்ள: ரமேஷ் கருப்பையா, 9444219993).