Published : 31 Mar 2017 09:07 AM
Last Updated : 31 Mar 2017 09:07 AM

விலை உயர்வு போன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே இந்து ராஜ்ஜியம் கோஷம்: திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் குற்றச்சாட்டு

அன்றாட பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே இந்து ராஜ்ஜியம் என்ற கோஷத்தை முன்வைக்கின்றனர் என்று திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் குற்றம்சாட்டியுள்ளார்.

காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் அரசி யல், பொதுவாழ்வில் நேர்மைக் கான காயிதே மில்லத் விருது வழங் கும் விழா, சென்னை மேடவாக்கத் தில் உள்ள கல்லூரி அரங்கில் நேற்று நடந்தது. காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி முதல்வர் அ.ரபி வரவேற்றார். அறக்கட்டளை தலை வரும் தமிழ்நாடு அரசு தலைமை காஜியுமான சலாவுத்தீன் முஹமது அயூப் தலைமை உரையாற்றினார். அறக்கட்டளை பொதுச் செயலாளர் எம்.ஜி.தாவூத் மியாகான் விரு தாளர்கள் பற்றி பேசினார்.

திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார், முன்னாள் எம்எல்ஏ முகமது இஸ்மாயில் ஆகியோருக்கு அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கான விருது வழங்கப் பட்டது. மாணிக் சர்க்காருக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல் கலைக்கழக முன்னாள் துணை வேந் தர் வி.வசந்திதேவியும், முகமது இஸ்மாயிலுக்கு தென்னிந்திய திருச்சபை பேராயர் தேவசகாயமும் விருதுகளை வழங்கினர்.

விழாவில் மாணிக் சர்க்கார் பேசியதாவது:

நாடு சிக்கலான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. மக்க ளிடம் குழப்பத்தையும், பகை உணர் வையும் வளர்த்து இந்தியாவை ஒரு இந்து நாடாக மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். இந்து மதத் துக்கு முன்பு வேறு எந்த மதமும் இருந்ததில்லை என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை தெளிவாகக் கூறுகிறது. அனைவருக்கும் சம உரிமையை அது உறுதிப்படுத்தியுள்ளது. அரசி யலமைப்புச் சட்டத்தின் கட்ட மைப்பை மாற்ற முயற்சிக்கின்றனர். அதற்காக சிறுபான்மையின மக் களை ஒடுக்குவதற்கான யுக்திகளை அவர்கள் கையாளுகின்றனர்.

விலையேற்றம்

அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம், பண மதிப்பு நீக்கம், பணவீக்கம், வேலை யின்மை போன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பு வதற்காகவே இந்து ராஜ்ஜியம் என்ற கோஷத்தை முன்வைக் கின்றனர். கடன் தொல்லை காரண மாக ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ள னர். திரிபுரா மாநிலத்தில் இக் காரணத்துக்காக ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ள வில்லை.

ஜனநாயகம், மதச்சார்பின்மை இல்லாவிட்டால் நாட்டில் ஒற்றுமை இல்லாமல் போய்விடும். எனவே ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களை நாட்டுப்பற்று மிகுந்த, மனிதாபிமானம் உள்ளவர் களாக உருவாக்க வேண்டும். காயிதே மில்லத் போன்றவர்களின் வாழ்க்கையை எடுத்துக்கூறி மாணவர்களை நல்ல குடிமக்களாக மாற்ற வேண்டும். அதற்காக தமிழகத்தையும் தாண்டி இந்த அறக்கட்டளையின் பணிகள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு மாணிக் சர்க்கார் பேசினார்.

ஊடகவியலாளர் ஞாநி, மனித உரிமை ஆர்வலர் அ.மார்க்ஸ் உள்ளிட்டோர் விழாவில் பங் கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x