

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் புகார்கள் தொடர்பாக, தமிழக தலைமைச் செயலருடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 12-ம் தேதி நடக்கிறது. இத்தேர்தல் தொடர் பாக கடந்த 2 தினங்களுக்கு முன் நடந்த அரசியல் கட்சி பிரதிநிதிகள் சந்திப்பின்போது, துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹாவிடம், பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் சென்றன. வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் வழங்கப் படுவதாக ஆதாரத்துடன் புகார்கள் அளிக்கப்பட்டன.
இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள், வருவாய் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மாற்றப் பட்டுள்ளனர். பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப் பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து அரசியல் கட்சிகள் மீது புகார் கள் வருவதையடுத்து, தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன், வருமான வரித்துறை இன்ஸ் பெக்டர் ஜெனரல் ஆகி யோருடன் இன்று மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் ஆலோசனை நடத்தப் படுகிறது.